சாகர் புயல்: மீனவர்களுக்கு எச்சரிக்கை!

/files/detail1.png

சாகர் புயல்: மீனவர்களுக்கு எச்சரிக்கை!

  • 1
  • 0

வித்யா 

அரபிக் கடலின் ஏடன் வளைகுடா பகுதியில் சாகர் என்ற புயல் உருவாகியுள்ளதால் தென்மேற்கு அரபிக்கடலோர பகுதிகளுக்கு மீனவர்கள் மீன் பிடிக்க செல்லவேண்டாம் எனச் சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

தமிழகத்தில் கடந்த வருடம் வடகிழக்கு பருவமழை பல மாவட்டங்களில் போதிய அளவு பெய்யவில்லை. இதன் காரணமாக கோடைக் காலத்தில் மழை பெய்யவேண்டும் என்று மக்களும் விவசாயிகளும் எதிர்பார்த்துக் காத்திருந்த நிலையில், கடந்த சில நாட்களாகப் பல இடங்களில் கோடை மழை பெய்து வருகிறது. இந்நிலையில் சாகர் புயல் உருவாகியுள்ளதாகக் கூறப்படுகிறது. இதனால் தமிழகத்திற்கு என்ன ஆபத்து வரப்போகிறது என்ற அச்சத்தில் உள்ளனர் மக்கள்.

இது குறித்து வானிலை மைய இயக்குநர் பாலச்சந்திரன், "ஏடன் வளைகுடா பகுதியில் நிலைகொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் தற்போது புயலாக மாறியுள்ளது. இந்தப் புயலுக்கு சாகர் எனப் பெயரிடப்பட்டுள்ளது. இது 50வது  புயல். மேலும் இந்தப் புயல் ஏமன் பகுதிக்கு கிழக்கில் 400 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது. புயல்  கிழக்கு திசையில் ஏமன் நோக்கி செல்லக்கூடும் என்பதால் தென் மேற்கு அரபிக் கடல் பகுதிக்கு மீனவர்கள் அடுத்த இரண்டு நாட்களுக்குச் செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்தப் புயலால் தமிழகத்திற்கு எந்த பாதிப்பும் இல்லை" என்று கூறினார்.

\r\n

Leave Comments

Comments (0)