இஸ்லாமியர்கள், ஈழத்தமிழர்களைக் குறிவைக்கும் குடியுரிமை சட்டத் திருத்தத்தைத் திரும்பப்பெறு- அம்பேத்கர் பெரியார் படிப்பு வட்டம்

/files/detail1.png

இஸ்லாமியர்கள், ஈழத்தமிழர்களைக் குறிவைக்கும் குடியுரிமை சட்டத் திருத்தத்தைத் திரும்பப்பெறு- அம்பேத்கர் பெரியார் படிப்பு வட்டம்

  • 0
  • 0

 

இஸ்லாமியர்களையும் ஈழத்தமிழர்களையும் பார்ப்பன பாசிச கும்பல் வதைமுகாம்களில் அடைக்கத் திட்டமிட்டுள்ளது என்று அம்பேத்கர் பெரியார் படிப்பு வட்ட தோழர்கள் கூறியுள்ளனர். 

இதுகுறித்து வெளியிடப்பட்ட அறிக்கையில், "அரசியலமைப்புச் சட்டத்தில் இடம்பெற்றுள்ள மதச்சார்பற்ற அரசு என்ற வார்த்தையை பாபர் மசூதி தீர்ப்பின் மூலம் உச்சநீதிமன்றம் கேலிக்குரியதாக்கியது. தற்போது குடியுரிமை சட்டத் திருத்த மசோதா மூலம் பாஜக அரசு, அந்தச் சொல்லை பொருளற்றதாக்கி விட்டது.

1955ஆம் ஆண்டு இயற்றப்பட்ட குடியுரிமைச் சட்டத்தில் 11 ஆண்டுகளுக்கும் மேலாக இந்தியாவில் வசிக்கும் வெளிநாட்டவருக்கு இந்தியக் குடியுரிமை வழங்கலாம் என்று கூறப்பட்டுள்ளது.

ஆனால் தற்போது, பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த ஹிந்துக்கள், சீக்கியர்கள், பௌத்தர்கள், சமணர்கள், பார்சி இனத்தவர், கிறிஸ்தவர்கள் ஆகியோருக்கு உரிய ஆவணங்கள் எதுவுமில்லை என்றாலும், இந்தியாவில் குறைந்தது 6 ஆண்டுகள் வசித்தாலே அவர்களுக்கு இந்தியக் குடியுரிமை வழங்கலாம் என்று திருத்தம் கொண்டுவரப்பட்டுள்ளது.

மேலும், 2014ஆம் ஆண்டு டிசம்பர் 31ஆம் தேதிக்கு முன் குடியேறியவர்களுக்கு இந்தியக் குடியுரிமை வழங்கலாம் என்றும் இந்த மசோதாவில் கூறப்பட்டுள்ளது.

இஸ்லாமியர்கள் தவிர்த்து மற்றவர்கள் என்ற பார்ப்பன பாசிச வெறியை அடிப்படையாகக் கொண்டு இந்த சட்டத்திருத்தம் செய்யப்பட்டுள்ளது.

இதன்மூலம், இஸ்லாமியர்கள், ஈழத்தமிழர்கள் ஆகியோரை ஆர்.எஸ்.எஸ் - பாஜக கும்பல் குறிவைத்துத் தாக்கியுள்ளது. இது அரசியல் சட்டப்பிரிவுகள் 15(1) மற்றும் 14க்கு முற்றிலும் எதிராக உள்ளது.

இதன்மூலம் ஹிட்லரின் ஜெர்மனியில் யூதர்கள் வதைமுகாம்களில் அடைத்துக் கொன்று குவித்ததைப்போல், இஸ்லாமியர்களையும் ஈழத்தமிழர்களையும் பார்ப்பன பாசிச கும்பல் வதைமுகாம்களில் அடைக்கத் திட்டமிட்டுள்ளது.

ஏற்கனவே, அசாமில் கொண்டு வரப்பட்ட குடியுரிமை பதிவேடு 20 லட்சம் மக்களைச் சட்டவிரோத குடியேறிகள் என்றது. இவர்களில் 12 லட்சம் மக்கள் இந்துக்கள். ஆர்.எஸ்.எஸ் - பாஜக கும்பலின் பாசிச நடவடிக்கைகளைப் போராடி முறியடிப்போம்” என்று தெரிவித்துள்ளனர். 

Leave Comments

Comments (0)