மீண்டும் புழுதிப்புயல்: ஒரே நாளில் 16 பேர் பலி!

/files/detail1.png

மீண்டும் புழுதிப்புயல்: ஒரே நாளில் 16 பேர் பலி!

  • 0
  • 0

-வித்யா

உத்திரபிரதேசத்தில் மீண்டும் ஏற்பட்டுள்ள புழுதிப்புயலால் நேற்று (ஜூன் 01) ஒரு நாள் மட்டும் 16 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த சில நாட்களாகவே வடமாநிலங்களில் மழையும், புழுதி புயலும் ஏற்பட்டு வருகிறது. இந்தப் புயலில் சிக்கி ஏற்கனவே நூற்றுக்கும் மேற்பட்டோர் இறந்துள்ளனர். இந்நிலையில் மீண்டும் புழுதி புயல் ஏற்பட்டுள்ளது. அதில் சிக்கி முராதாபாத்தில் 7 பேர் பேரும், முசாஃபாநகர், மீரட், சாம்பஹல் ஆகிய பகுதிகள் ஒவ்வொன்றிலும் 3 பேர் என மொத்தம் 17 பேர் ஒரேநாளில் உயிரிழந்தனர்.

மேலும் டெல்லியில் இரண்டு நாட்களாக கடும் வெயில் அடித்துக்கொண்டிருந்த நிலையில், இன்று (ஜூன் 02) அதிகாலை புழுதி புயலைத் தொடர்ந்து லேசான மழையும் பெய்துவருகிறது. பலத்த காற்றுடன் வந்த புழுதி புயலால் மரங்கள், மின்கம்பங்கள் வேரோடு சாய்ந்தன. வீடுகளில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்கள் இதில் சேதமடைந்தன.

இதனிடையே ராஜல்தான், உத்திரபிரதேசம் போன்ற மாநிலங்களில் அதிக மழைக்கு வாய்ப்புள்ளதாகவும், தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, கர்நாடகா, ஆந்திரபிரதேசம் கடலோர பகுதிகளில் பலத்த காற்று வீசும் என்பதாலும் அடுத்த நான்கு நாட்களுக்கு எச்சரிக்கையாக இருக்கும்படி வானிலை மையம் அறிவுறுத்தியுள்ளது.

 

 

\r\n

Leave Comments

Comments (0)