நிலவுடைமை ஆதிக்கவாதிகள் வைத்த தீயில் வெந்துமடிந்த 44 தியாகிகளின் நினைவு நாள்

/files/detail1.png

நிலவுடைமை ஆதிக்கவாதிகள் வைத்த தீயில் வெந்துமடிந்த 44 தியாகிகளின் நினைவு நாள்

  • 0
  • 0

 

கீழ்வெண்மணி படுகொலையின் 51ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று (டிசம்பர் 15) அனுசரிக்கப்படுகிறது.

நாகப்பட்டினம் மாவட்டத்தில் (அப்போதைய தஞ்சை மாவட்டம்) அமைந்துள்ள சிற்றூர் கீழ்வெண்மனி. அங்கு 1960 காலகட்டங்களில் நிலவுடைமை ஆதிக்கவாதிகளால் தலித் மக்கள் மிகப் பெரிய ஒடுக்குதலுக்கு ஆளாக்கப்பட்டனர். தஞ்சை மாவட்டத்தில் பரந்து விரிந்து கிடந்த விவசாய நிலங்களை தனதுடமையாக்கிய நிலச்சுவான்தார்கள் தலித் மக்களை அடிமைப்படுத்தி, தனது நிலங்களில் அடிமை வேலை பார்க்கவைத்து, அதற்குச் சரியான கூலி கொடுக்காமல் ஆணவத்தைப் பதிவுசெய்துவந்தனர்.

ஆணவ சாதியினர் தெருவில் நடந்துவரும்போது அவர்கள் கண்ணில் பட்டால் சாட்டை அடி கொடுப்பதும், உழைத்ததற்கான கூலியைக் கேட்டால் சானி பால் ஊற்றுவதும், ஆணவ சாதியினர் வசிக்கும் தெருவில் செருப்பணிந்து செல்ல தடை விதித்தும், தலித் மக்களின் பிள்ளைகளை பள்ளிக்கு போகவிடாமல் மாடு மேய்க்க வர சொல்வதும் என்று மிகப் பெரிய கொடுந்துயரத்தைச் செய்துவந்தனர் சாதி வெறி கொண்ட ஆதிக்கவாதிகள்.  

இந்த அநியாயத்திற்கு எதிராக, அரைப்படி நெல் அதிகம் கேட்டு விவசாயத் தொழிலாளர்களான தலித் மக்கள் பொதுவுடைமை இயக்கத்தினரின் துணையோடு செங்கொடி ஏற்றி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் கோபம்கொண்ட கோபாலகிருஷ்ண நாயுடு என்கிற பண்ணையாரின் தலைமையிலான சாதிவெறி கும்பல் 1968ஆம் ஆண்டு இதே நாளில் (டிசம்பர் 25) போராட்டத்தில் ஈடுபட்ட மக்களை கொடூரமாகத் தாக்கி, ஓட ஓட விரட்டி, ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 14 பேர் உட்பட கை குழந்தை, பெண்கள் என 44 பேர் ஒழிந்திருந்த குடிசையின் மீது பெட்ரோலை ஊற்றித் தீயிட்டு உயிரோடு எரித்தனர். இந்த சாதி தீயில் கருகி 44 பேரும் சாம்பலாகினர்.

இந்த துயரம் உலகம் முழுவதும் உள்ள உழைக்கும் வர்க்கத்தினருக்கு பெரும் மனவலியை ஏற்படுத்தியது. உழைப்புக்கேற்ற ஊதியத்தை அதாவது ஒரு படி நெல்லை அதிகம் கேட்டதற்காக 44 தலித் மக்கள் கொல்லப்பட்டு இன்றுடன் 51 ஆண்டுகள் ஆகிறது. நிலவுடைமை ஆதிக்க வெறியர்களின் ஈவிரக்கமற்ற இந்த வன்முறை வெறியாட்டத்திற்குப் பலியாகிய 44 பேரின் நினைவாக வெண்மணியில் நினைவகம் கட்டப்பட்டு அந்த போராளிகளுக்கு வீரவணக்கம் செலுத்திவருகின்றனர் அப்பகுதி மக்களும், இடது சாரி கட்சிகளும்.

alt text

இந்த படுகொலை செய்தவர்களை காவல்துறையினர் கைது செய்தனர். ஆனால் ”பெருமளவு நிலத்தை சொந்தமாக கொண்ட நிலவுடைமையாளர்கள் இத்தகைய குற்றத்தை செய்திருக்கமாட்டார்கள். அவர்கள் அந்த குற்றத்தில் ஈடுபட்டிருப்பார்கள் என்று நம்பமுடியவில்லை. மேலும் அவர்கள் மீதான் குற்றத்தை நிரூபிக்க அரசு தவறிவிட்டது” என்று உச்சநீதிமன்றம் தீர்பளித்து அனைவரையும் விடுதலை செய்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.
 

Leave Comments

Comments (0)