கல்வி நிறுவனங்களில் மத ரீதியில் மாணவர் குழுக்கள் அமைப்பதைத் தடுக்க வேண்டும்- கல்வித் துறை

/files/detail1.png

கல்வி நிறுவனங்களில் மத ரீதியில் மாணவர் குழுக்கள் அமைப்பதைத் தடுக்க வேண்டும்- கல்வித் துறை

  • 0
  • 0

 

கல்வி நிறுவனங்களில் இந்து மாணவர்களை ஒருங்கிணைக்கச் செயல்பட்டு வரும் குழு குறித்து விசாரிக்குமாறு கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.

இதுகுறித்து இன்று (அக்டோபர் 23) பள்ளிக் கல்வித் துறை துணை செயலாளர் வெங்கடேசன் அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அந்த அறிக்கையில், “பள்ளி, கல்லூரிகளில் இந்து இளைஞர் முன்னணி, இந்து மாணவர் முன்னணி அமைப்புகள் செயல்பட்டு வருவதாகவும், இந்து மாணவர்களை ஒருங்கிணைக்கும் பணியில் ஒவ்வொரு கல்லூரியிலும் 10 மாணவர்களைக் கொண்ட குழு உள்ளதாகத் தகவல் கிடைத்துள்ளது.

alt text

இந்து மாணவ, மாணவிகள் காதல் நடவடிக்கைகளில் ஈடுபடுகிறார்களா? எனவும் அந்த குழு கண்காணிப்பதாகவும் கூறப்பட்டுள்ளது. எனவே, இது குறித்து உடனடியாக பள்ளி, கல்லூரிகளில் கண்காணிப்பு செய்து அரசுக்கு அறிக்கை அனுப்பவேண்டும்” என்று  உத்தரவிட்டுள்ளார். 

Leave Comments

Comments (0)