மலக்குழி மரணம்: ஒப்பந்ததாரர் கைது 

/files/detail1.png

மலக்குழி மரணம்: ஒப்பந்ததாரர் கைது 

  • 1
  • 0

சென்னையில் மலக்குழி சுத்தம் செய்யும் பணியில் ஈடுபடுத்தப்பட்ட  இளைஞர் விசவாயு தாக்கி உயிரிழந்த வழக்கில் ஒப்பந்ததாரர் கைது செய்யப்பட்டுள்ளார். 

சென்னை ராயப்பேட்டையில் எக்ஸ்பிரஸ் அவென்யூ ஹாப்பிங் மாலின் கீழ் தளத்தில் உள்ள மலக்குழியில் அடைப்பு ஏற்பட்டதால் அதைச் சரிசெய்ய நேற்று (நவம்பர் 12)  காலை அருண்குமார், அவரது தம்பி ரஞ்சித்குமார், யுவராஜ், அஜித்குமார், ஸ்ரீநாத் ஆகிய 5 துப்புரவுத் தொழிலாளிகள் சென்றுள்ளனர்.

மலகுழியில் இறங்கி சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்ட ரஞ்சித் குமார் விசவாயு தாக்கி மயக்கமடைந்துள்ளார். இதனைப் பார்த்த அவரது அண்ணன் அருண்குமார் உடனே மலக்குழியில் இறங்கி ரஞ்சித்தைக் காப்பாற்றினார். இதனையடுத்து அருண்குமார் மலக்குழியிலிருந்து வெளியில் ஏற முற்பட்டபோது விச வாயு தாக்கியதில் அருண்குமார் பரிதாபமாக உயிரிழந்தார்.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் ரஞ்சித்தை மீட்டு சிகிச்சைக்காக அங்குள்ள மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும் அருண்குமாரின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக ராயப்பேட்டை மருத்துவமனைக்கு அனுப்பிவைத்துள்ளனர். இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.  

இந்நிலையில் நான்கு துப்புரவுத் தொழிலாளிகளையும் பணிக்கு அமர்த்திய ஒப்பந்ததாரர் தண்டபாணி என்பவரை காவல்துறையினர் கைது செய்தனர். மனித கழிவுகளை மனிதர்கள் கையால் அள்ளத் தடை விதிக்கும் சட்டத்தில் முதன்முறையாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave Comments

Comments (0)