மழைக்கு வாய்ப்பு!

/files/detail1.png

மழைக்கு வாய்ப்பு!

  • 0
  • 0

-வித்யா 

தென் மேற்கு அரபிக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி இருப்பதால் தமிழகத்தில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாகச் சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
\r\n
\r\nதமிழகத்தில் திருச்சி, தூத்துக்குடி, சேலம், கொடைக்கானல், கோவை, மதுரை, தேனீ, வேலூர் போன்ற மாவட்டங்களில் பரவலாக மழை பெய்துவருகிறது. ஆனால் சென்னையை பொறுத்தவரை மழை மேகங்கள் எட்டிக்கூடப் பார்க்கவில்லை. வெயில் கொளுத்திவருகிறது. நேற்று (மே 13) சென்னையில் பரவலாக 36-37 டிகிரி வெப்பம் பதிவாகியிருந்தது. 
\r\n
\r\nஇந்நிலையில் இன்று (மே 14) சென்னை நுங்கம்பாக்கத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த வானிலை மைய இயக்குநர் பாலச்சந்திரன், "தென் மேற்கு அரபிக் கடலில் காற்றழுத்த தாழ்வு உருவாகியுள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும். எனவே மீனவர்கள் யாரும் தென் அரபிக் கடலுக்குள் மீன் பிடிக்க செல்லவேண்டாம்.
\r\n
\r\nஇந்த காற்றழுத்த தாழ்வினால் வட மற்றும் தென் தமிழகத்தின் உள் மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. அக்னி நட்சத்திரத்தின் காரணமாக தமிழகத்தின் ஒரு சில இடங்களில் கோடை மழை பெய்யவும் வாய்ப்புள்ளது. 
\r\n
\r\nகடந்த 24 மணி நேரத்தைப் பொறுத்தவரையில், திண்டுக்கல் மாவட்டம் பழனியில் 4 செ.மீ., மழையும், திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டையில் 3 செ.மீ., மழையும் பதிவாகியுள்ளது" எனத் தெரிவித்தார்.

\r\n

Leave Comments

Comments (0)