டெல்டா மாவட்டங்களில் மீண்டும் மழை- மக்கள் வேதனை  

/files/detail1.png

டெல்டா மாவட்டங்களில் மீண்டும் மழை- மக்கள் வேதனை  

  • 0
  • 0

-ஆனந்தி 

டெல்டா மாவட்டங்களில் மழை தொடரும் எனச் சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. 

காவேரி டெல்டா மாவட்டங்கள் உள்டப்பட தமிழகத்திலும் பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. மேலும், வங்காள கடலில் உருவான கஜா புயலால் தமிழகத்தில் பல இடங்கள் சேதமடைந்துள்ளன. இதனால், மக்கள் பெரும் அளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். இதைத்தொடர்ந்து, மழை படிப்படியாக குறைந்து வறண்ட வானிலை காணப்படுகிறது. இந்நிலையில், "நவம்பர் 29ஆம் தேதி முதல் டிசம்பர் 1 முதல் கடலோர மாவட்டங்கள் உட்பட தமிழகத்தில் பல்வேறு இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது " என வானிலை மையம் தெரிவித்துள்ளது. 

தஞ்சை மாவட்டம் கும்பகோணம், பாபநாசம், அணைக்கரை உள்ளிட்ட பகுதியில் மழை பெய்து வருகிறது. மேலும் திருவாருர்  மாவட்டம், திருத்துறைப்பூண்டி, மன்னார்குடி உள்ளிட்ட பகுதிகளிலும் கடலூர் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. 

கஜா புயலால் தங்கள் வீடுகளை இழந்து தவிக்கும் மக்கள் நிவாரண முகாம்களில் தங்கியிருக்கும் நிலையில், தற்போது மீண்டும் மழை பெய்ய தொடக்கி உள்ளதால் வீடுகளை சரி செய்யும் பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து, திண்டுக்கல் மற்றும் சுற்று வட்டார பகுதிகளிலும் சிவகங்கை மாவட்டம் காரைக்குடி மற்றும் சுற்று வட்டார பகுதிகளிலும், அரியலூர், ஜெயங்கொண்டம், செந்துறை, திருமானூர், ஆண்டிமடம், தா.பழூர் உள்ளிட்ட பகுதிகளில் மற்றும் திருச்சி, பெரம்பலூர், மணப்பாரை, புதுக்கோட்டை மாவட்டம், திருமயம், உள்ளிட்ட பகுதிகளிலும் நாகை மாவட்டம் சீர்காழி, தரங்கம்பாடி, உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்து வருகிறது

Leave Comments

Comments (0)