தலித் இளைஞர்களைத் தாக்கிய இந்து முன்னணியினரைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்

/files/detail1.png

தலித் இளைஞர்களைத் தாக்கிய இந்து முன்னணியினரைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்

  • 0
  • 0

காவேரிப்பாக்கத்தில் கள்ளசாரயம் காய்ச்சிவந்த இந்து முன்னணியினரை அம்பலப்படுத்தியதற்காகத் தலித் சமூகத்தைச் சேர்ந்த இளைஞர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதைக் கண்டித்து நவம்பர் 1ஆம் தேதி மக்கள் மன்ற தோழர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தவுள்ளனர்.

கடந்த 14ஆம் தேதி வேலூர் மாவட்டத்திலுள்ள ஈரளச்சேரி கிராமத்தில் கள்ளச்சாராயம் காய்ச்சப்படுவதாகப் பொதுமக்களிடமிருந்து ரகசியத் தகவல் வந்ததையடுத்து விடுதலை சிறுத்தைகள் கட்சியின் ஒன்றிய செயலாளர் தினேஷும்,  வேலூர் மாவட்ட மக்கள் மன்ற பொறுப்பாளரான விவேக்கும் சுமார் 50 இளைஞர்களோடு சாராயம் காய்ச்சும் இடத்தை கண்டுபிடித்து முற்றுகையிட்டனர். இதுகுறித்து காவல்துறையினருக்கும் தகவல் கொடுக்கப்பட்டது. கடந்த 14ஆம் தேதி 8 மணி தகவல் கொடுக்கப்பட்டது. ஆனால் காவல்துறையினர் 2 மணிக்குச் சம்பவ இடத்திற்கு வந்தனர். அதற்குள்ளாகக் கள்ளச்சாராயம் காய்ச்சியவர்கள் தப்பித்துச் சென்றுள்ளனர்.

கள்ளச் சாராய காய்ச்சி வந்த கும்பலைக் கண்டித்து அதை அம்பலப்படுத்தியதற்காக அப்பகுதி மக்கள் மன்ற தோழர்கள் விவேக் மற்றும் அப்பகுதி தலித் இளைஞர்கள் மீது 50க்கும் மேற்பட்ட இந்துமுண்ணனி மற்றும் பாமக கும்பல் கொலை வெறி தாக்குதல் நடத்தியுள்ளது. 

படுகாயமடைந்த இளைஞர்கள் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருகின்றனர். இந்த கலவரத்தை நடத்தும் கும்பல் மீது மாவட்ட காவல் துறை எந்த நடவடிக்கையும் எடுக்காமல் வேடிக்கை பார்த்துவருவதாக மக்கள் மன்ற தோழர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

இந்நிலையில் இச்சம்பவம் குறித்து மக்கள் மன்ற தோழர்கள், “காவேரிப்பாக்கம் காவல்நிலையத்திற்குட்பட்ட அத்தனை பகுதிகளிலும் சாதிய வெறியாட்டமும், மத வெறியர்களின் சமூக விரோத செயல்களும் தலைவிரித்தாடுகிறது. இதைத் தடுக்கவேண்டிய காவல்துறையினரும் அவர்களோடு சேர்ந்துகொண்டு லஞ்சம் பெற்றுக்கொண்டு சமூக விரோதிகளை வளர்க்கும் செயலில் ஈடுபட்டுவருகிறது. இதுகுறித்து மாவட்ட கண்காணிப்பாளரைச் சந்தித்து புகார் மனு அளித்திருக்கிறோம். வருகிற நவம்பர் 1ஆம் தேதி துணை கண்காணிப்பாளரைக் கண்டிக்கிற வகையிலும், சாதி மத வெறியர்களுக்கு எதிராகவும் மக்கள் மன்ற தோழர்கள் போராட்டம் நடத்தவுள்ளனர். இதில் விடுதலை சிறுத்தைகள் கட்சி உட்படப் பல கட்சிகள் போராட்டத்தில் ஈடுபடவுள்ளனர்” என்று தெரிவித்துள்ளனர்.


 

Leave Comments

Comments (0)