தலித் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த சிறைக் காவலர்கள்

/files/detail1.png

தலித் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த சிறைக் காவலர்கள்

  • 0
  • 0

மத்தியப் பிரதேச மாநிலத்தில் 35 வயது மதிக்கத்தக்கத் தலித் பெண்ணை சிறைக் காவலர்கள் இருவர் உட்பட மூன்று பேர் பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.

மத்தியப் பிரதேச மாநிலம், ஷாஜாப்பூர் மாவட்டத்தில் வசிக்கும் தலித் பெண் ஒருவர், வழிபறி வழக்கில் கைது செய்யப்பட்டு 10ஆண்டுகளாகச் சிறைத் தண்டனை அனுபவித்துவரும் தனது கணவரைச் சந்திக்கப் புதன்கிழமையன்று சென்றுள்ளார். அப்போது  அங்கு இருந்த சிறை காவலர்கள் இருவரும், அந்த  சிறை காவலர்களில் ஒருவரின் மருமகனும் அந்த பெண்ணை இருசக்கர வாகனத்தில் ஏற்றி, ராஜ்கர் மாவட்டத்தில் உள்ள சரங்பூருக்கு அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.

இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண் கடந்த புதன்கிழமை சல்சலை காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தார்.  அதன் பின்னர் இரண்டு சிறைக் காவலர்கள் உட்பட மூன்று பேர் மீது எஸ்.சி/ எஸ்.டி வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.  பாலியல் வன்கொடுமை செய்த ஒரு சிறைக் காவலர் மட்டும் கைது செய்யப்பட்டுள்ளார். மற்ற மூவரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
 

Leave Comments

Comments (0)