பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை: இருவர் மீதான குண்டர் சட்டம் ரத்து 

/files/detail1.png

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை: இருவர் மீதான குண்டர் சட்டம் ரத்து 

  • 0
  • 0

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதான திருநாவுக்கரசு, சபரி ராஜன் ஆகிய இருவர் மீதான குண்டர் சட்டத்தை ரத்து செய்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கோவை மாவட்டம், பொள்ளாச்சியில் பள்ளி, கல்லூரி மாணவிகள், குடும்ப பெண்கள் என 250க்கும் மேற்பட்ட பெண்களை பாலியல் வன்கொடுமை செய்து 1100க்கும் அதிகமான வீடியோவை எடுத்துவைத்துக்கொண்டு அப்பெண்களை மிரட்டி பணம், நகை போன்றவற்றைப் பறிக்கும் வேலையைச் செய்துவந்த திருநாவுக்கரசு, சதீஸ், சபரி ராஜன், வசந்த குமார், மணிவண்ணன் ஆகிய ஐந்து பேரைக் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் காவல்துறையினர் கைது செய்து கோவை மத்தியச் சிறையில் அடைத்துள்ளனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியநிலையில், இந்த சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று தமிழகத்தின் பல பகுதிகளில் போராட்டமும் வெடித்தது.

இந்த வழக்கை சிபிஐ விசாரித்துவந்த நிலையில், தற்போது வழக்கில் தொடர்புடைய திருநாவுக்கரசு மற்றும் சபரிராஜன் ஆகிய இருவர் மீது போடப்பட்ட குண்டர் சட்டத்தை ரத்து செய்யவேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். வழக்கினை விசாரித்த நீதிபதிகள், ”குண்டர் சட்டம் தொடர்பான ஆவணங்கள் தெளிவாக இல்லாத காரணத்தால் இருவர் மீதான குண்டர் சட்டத்தை ரத்து செய்து உத்தரவிட்டனர்.  
 

Leave Comments

Comments (0)