'பாபர் மசூதி தீர்ப்பு'' நோட்டீஸ் கொடுக்கக் கூடாது என்று மிரட்டும் காவல்துறை

/files/detail1.png

'பாபர் மசூதி தீர்ப்பு'' நோட்டீஸ் கொடுக்கக் கூடாது என்று மிரட்டும் காவல்துறை

  • 0
  • 0

'பாபர் மசூதி தீர்ப்பு'  தொடர்பாக நோட்டீஸ் கொடுக்கக் கூடாது என்று அம்பேத்கர் பெரியார் படிப்பு வட்டம் மாணவர்களை காவல்துறையினர் மிரட்டியுள்ளனர். 

உத்தரப் பிரதேச மாநிலம், அயோத்தியில் பாபர் மசூதி அமைந்திருந்த 2.77 ஏக்கர் நிலம் யாருக்குச் சொந்தமானது என்பது குறித்த முக்கிய தீர்ப்பை கடந்த நவம்பர் 09ஆம் தேதி தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், நீதிபதி எஸ்.ஏ. பாப்டே, அசோக் பூஷன், சந்திரசூட், அப்துல் நசீர் ஆகிய ஐந்து பேரும் ஒரு மனதாக வழங்கியுள்ளனர்.

அந்த தீர்ப்பில்,”பாபர் மசூதி இருந்த இடம் தங்களுடையது என்பதை இஸ்லாமிய அமைப்புகள் நிரூபிக்கவில்லை. மேலும் பாபர் மசூதி காலிமனையில் கட்டப்படவில்லை. அதனால் அந்த சர்ச்சைக்குரிய நிலத்தை இந்து அமைப்புகளுக்கு நிபந்தனையுடன் வழங்கவேண்டும். அயோத்தியில் இஸ்லாமியர்கள் தொழுகை நடத்த 5 ஏக்கர் அளவில் மூன்று மாதங்களுக்கு மாற்று இடம் வழங்கப்படும் என்று உத்தரவிட்டுள்ளனர். மேலும் அயோத்தியில் ராமர் கோயில் கட்ட புதிய அறக்கட்டளை உருவாக்கப்பட வேண்டும். 3 மாதத்தில் அறக்கட்டளையை உருவாக்கவேண்டும். அறக்கட்டளையின் உறுப்பினர்களை 3 மாதங்களுக்குள் மத்திய அரசு நியமிக்கவேண்டும்” என்று உத்தரவிட்டுள்ளனர்.

இந்த தீர்ப்புக்குப் பலரும் எதிர்ப்பு தெரிவித்துவருகின்றனர்.  இந்நிலையில் சென்னைப் பல்கலைக்கழகத்தில் அம்பேத்கர் பெரியார் படிப்பு வட்டம் மாணவர்கள் "பாபர் மசூதி வழக்கு: இஸ்லாமியர்களுக்கு மாபெரும் அநீதி" என்ற தலைப்பில் மாணவர்களிடையே நோட்டீஸ் விநியோகிக்கப்பட்டது.

ஆர்.எஸ்.எஸ் - சங்பரிவார கும்பலின் பாசிச நடவடிக்கைக்கு உச்சநீதிமன்றம் எவ்வாறு சட்டப்பூர்வ அங்கீகாரம் வழங்கியுள்ளது, இதனால் ஏற்படவிருக்கும் விளைவுகள், ஆர்.எஸ்.எஸின் ஹிந்துராஷ்டரா கனவு, அந்த பாசிசக் கனவை எவ்வாறு முறியடிப்பது உள்ளிட்டவற்றை விளக்கி மாணவர்கள் மத்தியில் அம்பேத்கர் பெரியார் படிப்பு வட்ட மாணவர்கள் பிரச்சாரம் செய்தனர்.

மாணவர்கள் நோட்டீஸ் கொடுக்க ஆரம்பித்தவுடன், நூற்றாண்டு விழா கட்டிடத்தின் கேட்டுகளை பல்கலைக்கழக நிர்வாகத்தினர் பூட்டினர். உடனடியாக, அங்கு வந்த காவல்துறையினர் 'பாபர் மசூதி வழக்கு தொடர்பாக நோட்டீஸ் கொடுக்கக் கூடாது, உங்க போன் நம்பரைக் கொடு' என்று மாணவர்களை மிரட்டி சென்றனர்.  இது எங்களுடைய ஜனநாயக உரிமை, இதை நீங்கள் தடுக்க முடியாது என்றுகூறி மாணவர்கள் மத்தியில் நோட்டீஸ் கொடுத்தனர் படிப்பு வட்ட மாணவர்கள். 

Leave Comments

Comments (0)