17 பேரின் உயிரிழப்புக்கு நீதிகேட்டுப் போராடியவரை நிர்வாணப்படுத்தித் தாக்கிய காவல்துறை

/files/detail1.png

17 பேரின் உயிரிழப்புக்கு நீதிகேட்டுப் போராடியவரை நிர்வாணப்படுத்தித் தாக்கிய காவல்துறை

  • 0
  • 0

மேட்டுப்பாளையத்தில் தீண்டாமை சுவர் இடிந்துவிழுந்து 17 பேர் உயிரிழந்ததற்கு நீதி கேட்டுப் போராடியவரை காவல்துறையினர் நிர்வாணப்படுத்தித் தாக்கி கைவிரல்களை உடைத்திருக்கின்றனர்.

மேட்டுப்பாளையம் அருகில் உள்ளது நடூர். இங்கு சக்ரவர்த்தி துகில் மாளிகை என்னும் பெயரில், துணிக்கடை உரிமையாளர் சிவசுப்ரமணியத்திற்கு சொந்தமான வீடு உள்ளது. ஆணவ சாதியைச் சேர்ந்த இவருடைய வீட்டைச் சுற்றி, ஆணவ சாதி மக்களையும் தலித்   மக்களையும் இரண்டாகப் பிரிக்கும் வகையில் 20 அடி தீண்டாமை சுவரைக் கட்டியுள்ளார்.

கருங்கல்லால் கட்டப்பட்ட அந்த சுவர் பராமரிப்பின்மை காரணமாகக் கடந்த டிசம்பர் 03ஆம் தேதி பெய்த மழையினால் அதிகாலை 5.30 மணிக்குத் தலித் மக்கள் குடியிருப்பின் மீது இடிந்து விழுந்துள்ளது. இதில் மூன்று வீடுகள் முழுமையாக நசுங்கி அதிலிருந்த பெண்கள் உட்பட 17 பேரும் உடல் சிதைந்து இறந்துள்ளனர். 17 பேரில் இரண்டு பேர் குழந்தைகள்.

தீண்டாமை சுவரால் 17 தலித் மக்களை ஆணவ சாதி வெறி கொலை செய்திருக்கிறது. மேலும்  17 பேரின் கொலைக்கு நீதி கேட்டுப் போராடிய  நாகை திருவள்ளுவன், வெண்மணி, கார்க்கி உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட தோழர்கள் மீது காவல்துறையின் வழக்குப்பதிவு செய்து கைது செய்து சிறையில் அடைத்தனர். கைது செய்யப்பட்ட தோழர்கள் கடந்த சனிக்கிழமை மாலை 4 மணிக்குக்  விடுவிக்கப்பட்டனர். 

17 பேரின் உயிருக்கு நீதி கேட்டுப் போராடிய மேட்டுப்பாளையத்தைச் சேர்ந்த லட்சுமணன் என்பவரையும் காவல்துறையினர் கைது செய்து விடுதலை செய்துள்ளனர். ஆனால் நேற்றுக் (டிசம்பர் 10) லட்சுமணனைக் காவல் உதவி ஆய்வாளர் நிர்வாணப்படுத்தித் தாக்கி கைவிரல்களை உடைத்திருக்கிறார். சாதியவாதிகளுக்குத் துணைபோகும்  அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கைகள் இல்லாததால் இதுபோன்ற வன்கொடுமைகள் தொடர்கின்றன என்று கூறுகின்றனர் அப்பகுதி மக்கள்.
 

Leave Comments

Comments (0)