சாதிப் பெயரைக் குறிப்பிட்டு இழிவாகப் பேசிய ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்க கோரி மனு

/files/detail1.png

சாதிப் பெயரைக் குறிப்பிட்டு இழிவாகப் பேசிய ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்க கோரி மனு

  • 0
  • 0

 

விருதுநகர் மாவட்டத்தில் பள்ளி மாணவரைச் சாதிப் பெயரை குறிப்பிட்டு இழிவுபடுத்திய  உதவி தலைமையாசிரியர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.

விருதுநகர் மாவட்டம், கரிசல் குளத்தில் அரசு உயர் நிலைப் பள்ளி ஒன்று செயல்பட்டுவருகிறது. இந்த பள்ளியில் அருந்ததியர் சமூகத்தைச் சேர்ந்த அயன் என்பவர் படித்துவருகிறார். இந்நிலையில், அந்தப்பள்ளியில் உதவி தலைமையாசிரியராக பணிபுரியும் ஞானகுரு என்பவர் அயனை, அயன் என்று அழைக்காமல் மாட்டுக்கறி பெருமாள் என்று தொடர்ச்சியாக அழைத்து வந்துள்ளார். 

இதனால் அயன் வீட்டிற்குச் சென்று தனது பெற்றோரிடம் இதுகுறித்து கூறியிருக்கிறார். இதனையடுத்து அயனின் சகோதரர்கள் பள்ளிக்குச் சென்று இதுகுறித்து கேட்டபோது, ஆசிரியர் ஞானகுரு, “சக்கிலி பயலுககிட்டலாம் நான் பேசிறதுயில்ல” என்று சொல்லிருக்கிறார். இதனையடுத்து, பள்ளி மாணவர்களைச் சாதிப் பெயரைக் குறித்து இழிவாகப் பேசிய ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி மாவட்ட ஆட்சியரிடம் மாணவர்கள் மனு அளித்துள்ளனர்.
 

Leave Comments

Comments (0)