பெரியாரும் போராட்டங்களும் விளக்கப் பொதுக்கூட்டம்

/files/detail1.png

பெரியாரும் போராட்டங்களும் விளக்கப் பொதுக்கூட்டம்

  • 0
  • 0

இன்று (நவம்பர் 29) மாலை 6 மணிக்குத் தந்தை பெரியார் திராவிடர் கழகம் சார்பில், “பெரியாரும் போராட்டங்களும்” என்ற தலைப்பிலான விளக்கப் பொதுக்கூட்டம் நடைபெறுகிறது.

குழந்தை திருமண எதிர்ப்பு, பெண்களுக்குக் கல்வி, விதவை மறுமணம்,  துணைவர்களைத் தேர்ந்தெடுக்கும் உரிமை, சாதி ஒழிப்பு போன்றவற்றிற்காகத் தொடர்ந்து போராடிய பெரியார் குறித்தும் அவரின் போராட்டத்தைக் குறித்தும் இன்று ராயப்பேட்டை இலாயிட்சு ரோட்டில் உள்ள P.M.தர்கா சந்திப்பில் பொதுக்கூட்டம் நடைபெறுகிறது.

இதில் மே 17 இயக்கத்தைச் சேர்ந்த தோழர் திருமுருகன் காந்தி, தமிழர் தேசிய விடுதலை கழகத்தைச் சேர்ந்த ஜோசப் கென்னடி, திராவிடர் கழகத்தைச் சேர்ந்த தோழர் தமிழ் சாக்ரடிஸ், வழக்கறிஞர் துரை அருண் உள்ளிட்ட பலர் கலந்துகொள்ளவிருக்கின்றனர்.
 

Leave Comments

Comments (0)