தலித் சமூகத்தைச் சேர்ந்த இறந்தவரின் உடலை எடுத்துச் செல்ல எதிர்ப்பு: தொடரும் தீண்டாமை

/files/detail1.png

தலித் சமூகத்தைச் சேர்ந்த இறந்தவரின் உடலை எடுத்துச் செல்ல எதிர்ப்பு: தொடரும் தீண்டாமை

  • 0
  • 0


கோவை மாவட்டம், விளாங்குறிச்சியில் தலித் சமூகத்தைச் சேர்ந்த ஒருவரின் இறந்த உடலை ஆணவ சாதியினர் வசிக்கும் பகுதி வழியாக எடுத்துச் செல்ல எதிர்ப்பு கிளம்பியதால், இறந்த உடலைச் சாக்கடை வழியாக எடுத்துச் சென்ற அவல நிலை நடந்துள்ளது.

கோவை மாவட்டம், விளாங்குறிச்சியில் உள்ளது லெனின் நகர். இந்த பகுதியில் தலித் சமூகத்தைச் சேர்ந்தவர்களுக்கு ஒரு சுடுகாடு, மற்ற சாதியைச் சேர்ந்தவர்களுக்கு ஒரு சுடுகாடு என இரு சுடுகாடு உள்ளன.  இந்நிலையில், கடந்த 21ஆம் தேதி தலித் சமூகத்தைச் சேர்ந்த பாப்பாம்மாள் என்பவர் உடல் நிலை சரியில்லாமல் உயிரிழந்தார். அவரின் உடலை அடக்கம் செய்ய ஆணவ சாதியினரின் குடியிருப்பு வழியாகத்தான் செல்லவேண்டும். ஆனால் இதற்கு ஆணவ சாதியினர் அனுமதி தரவில்லை. இதனால் பாப்பாம்மாளின் உடல் சாக்கடை வழியாக மிகுந்த சிரமத்திற்கு மத்தியில் எடுத்து செல்லப்பட்டு அடக்கம் செய்யப்பட்டது. இதுதொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

பல வருடங்களாகத் தலித் மக்கள் சுடுகாட்டிற்குச் செல்ல பாதை அமைத்துத் தருமாறு பல மனுக்களை அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று அம்மக்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

Leave Comments

Comments (0)