புதிய கல்விக் கொள்கை: திராவிடர் விடுதலைக் கழகத்தினர் ஆர்ப்பாட்டம்

/files/detail1.png

புதிய கல்விக் கொள்கை: திராவிடர் விடுதலைக் கழகத்தினர் ஆர்ப்பாட்டம்

  • 0
  • 0

புதிய கல்விக் கொள்கை முறைக்கு எதிர்ப்பு தெரிவித்து திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் இன்று (அக்டோபர் 02) சென்னையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

புதிய கல்விக் கொள்கை என்ற பெயரில் இந்தியையும் அதன் வழியாகச் சமஸ்கிருதத்தையும் திணிக்கும் புதிய கல்விக் கொள்கையைப் பலரும் எதிர்த்துவருகின்றனர். சேவைத் துறையாக இருந்த கல்வித் துறையை வர்த்தக துறையாக மாற்ற ஆளும் பாசிச பாஜக முடிவெடுத்திருக்கிறது. மையமாக்குதல், சாதியமயமாக்கல், வணிகமயமாக்கல் ஆகிய மூன்று கருத்துக்களை மையப்படுத்தி இந்த புதிய கொள்கை முறை இருப்பதாகவும், அனைத்து மக்களுக்குமான கல்விக் கொள்கையாக இல்லாமல், இது கல்வியைச் சர்வதேசச் சந்தையில் கடைவிரிக்கும் கார்ப்பரேட் நலனாக இருக்கிறது என்றும் இந்த திட்டத்திற்கு எதிர்ப்புகள் வழுபெற்றுவருகிறது. 3, 4, 8ஆம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு, 9 முதல் 12ஆம் வகுப்புகளுக்குப் பருவ தேர்வு (செமஸ்டர்) ஏழை மாணவர்களைக் கல்வி கற்கவிடாமல் தடுக்கும் அத்தனை வழிமுறைகளும் இந்த புதிய கல்விக்கொள்கை முறையில் இருக்கிறது. அதனால் இந்த திட்டத்தை ரத்து செய்யக்கோரித் தொடர் ஆர்ப்பாட்டங்களும், போராட்டங்களும் நடந்தவண்ணம் உள்ளன.

அவ்வகையில் இன்று திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில், சென்னை சிம்சன் அருகே உள்ள பெரியார் சிலை அருகே, `புதிய கல்விக்கொள்கை நகல்களைக் கிழிக்கும் ஆர்ப்பாட்டம்` நடைபெற்றது. இதில் சுமார் 100க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு குலத்தொழிலை ஊக்குவிக்கும் இந்த முறைக்கு எதிரான முழக்கங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

Leave Comments

Comments (0)