வேலூர் பெண்கள் சிறையில் நளினி நான்காவது நாளாக உண்ணாவிரதம்

/files/detail1.png

வேலூர் பெண்கள் சிறையில் நளினி நான்காவது நாளாக உண்ணாவிரதம்

  • 0
  • 0

முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் 28 ஆண்டுகளாகச் சிறைத் தண்டனை பெற்றுவரும் நளினி கடந்த நான்கு நாட்களாகச் சிறையில் உண்ணாவிரதம் மேற்கொண்டுவருகிறார்.

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி, கடந்த 1991ஆம் ஆண்டு மே மாதம் 21ஆம் தேதி சென்னையை அடுத்த ஸ்ரீபெரும்புதூரில் நடைபெற்ற தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டபோது குண்டு வைத்து கொலை செய்யப்பட்டார். இந்தக் கொலை தொடர்பாக முருகன், சாந்தன், பேரறிவாளன், நளினி, ராபர்ட் பயஸ், ரவிச்சந்திரன், ஜெயக்குமார் ஆகிய 7 பேருக்குத் தண்டனை விதிக்கப்பட்டது. 7 பேரும், 28 ஆண்டுகளாகச்  சிறைத் தண்டனைப் பெற்று வரும் நிலையில், ‘அரசியல் சாசன பிரிவு 161-ன் கீழ், 7 பேரையும் விடுதலை செய்யும் விஷயத்தில் ஆளுநருக்கு உரிமை உள்ளது' என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

இதனையடுத்து, கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 9ஆம் தேதி, தமிழக அமைச்சரவைக் கூட்டத்தில், 7 பேரின் விடுதலைக்கான தீர்மானத்தை நிறைவேற்றி அதைத் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்துக்குப் பரிந்துரை செய்து அனுப்பிவைத்தார் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி. ஆனால், ஆளுநர் அந்தத் தீர்மானத்தின் மீது ஒரு வருட காலமாக எந்த நடவடிக்கையும் எடுக்காமலிருக்கிறார்.

இந்நிலையில், வேலூர் பெண்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நளினி கடந்த ஞாயிறு அன்று சிறைத்துறை கண்காணிப்பாளருக்கு மனு அளித்தார். அதில், “கடந்த 28 ஆண்டுகளாக நானும் எனது கணவர் முருகனும் சிறையில் இருந்துவருகிறோ. எங்கள் மகளைப் பிரிந்துவாடுகிறோம். ஆகவே எங்களை முன் விடுதலை செய்யுங்கள்” என்று மனு அளித்துவிட்டுக் கடந்த நான்கு நாட்களாக உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுவருகிறார். 

Leave Comments

Comments (0)