கன மழைக்கு வாய்ப்பு!

/files/detail1.png

கன மழைக்கு வாய்ப்பு!

  • 0
  • 0

-வித்யா

நேற்று (மே 04) கத்தரி வெயில் என்னும் அக்னி நட்சத்திரம் தொடங்கியது. அக்னி நட்சத்திரம் தொடங்குவதற்கு முன்பாகவே தமிழகத்தில் வெயில் வாட்டி வதைத்து வந்ததது. இந்நிலையில் அக்னி நட்சத்திரம் தொடங்கியதால், இயல்பை விட 0.5 டிகிரி முதல் 1 டிகிரி வரை வெயில் அதிகமாக இருக்கும். அதே சமயத்தில் உள்  மாவட்டங்களில் கோடை மழை பெய்யும் எனவும் வானிலை மையம் அறிவுறுத்தியிருந்தது. 

இந்நிலையில் "வெப்பச் சலனம் காரணமாக அடுத்து வரும் 24 மணி நேரத்தில் தமிழகத்தின் உள் பகுதி மற்றும் தென் தமிழகப் பகுதியின் சில இடங்களிலும், வடக்கு கடலோரத் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களிலும் மிதமான அல்லது இடியுடன் கூடி மழை பெய்ய வாய்ப்புள்ளது. மேலும், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் பலத்த காற்று மற்றும் இடியுடன் கூடிய மழையோ அல்லது கனமழையோ பெய்யக்கூடும். திருவள்ளூர், காஞ்சிபுரம், திருவண்ணாமலை, திருச்சி, பெரம்பலூர், கரூர், தஞ்சாவூர், மதுரை ஆகிய மாவட்டங்களில் அடுத்து வரும் 24 மணி நேரத்தில் 106 டிகிரி ஃபாரன்ஹீட் வரை வெப்பநிலை உயர வாய்ப்புள்ளது" என வானிலை மைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

 

\r\n

Leave Comments

Comments (0)