மாற்றுச் சாதிப் பெண்ணை திருமணம் செய்துகொண்ட இளைஞன் ஆணவக் கொலை

/files/detail1.png

மாற்றுச் சாதிப் பெண்ணை திருமணம் செய்துகொண்ட இளைஞன் ஆணவக் கொலை

  • 0
  • 0

சென்னை பெரும்பாக்கத்தில் காதலித்துச் சாதி மறுப்பு திருமணம் செய்துகொண்ட இளைஞன் நேற்று (நவம்பர் 05) ஆணவக் கொலை செய்யப்பட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

சென்னை பெரும்பாக்கத்தை சேர்ந்தவர் முரளி (28). ஐடியில் வேலை செய்துவரும் இவரும், செம்மஞ்சேரியை சேர்ந்த கௌசல்யாவும் காதலித்துவந்துள்ளனர். இருவரும் வெவ்வேறு சாதியைச் சேர்ந்தவர்கள் என்பதால் பெண்ணின் வீட்டில் எதிர்ப்பு கிளம்பியிருக்கிறது. இதனால் சில மாதங்களுக்கு முன்பு இருவரும் வீட்டைவிட்டு வெளியேறிச் சாதி மறுப்பு திருமணம் செய்துகொண்டு முரளியின் வீட்டில் வாழ்ந்துவந்தனர். இதில் கௌசல்யாவின் பெற்றோர் கடும் கோபத்திலிருந்ததாகக் கூறப்படுகிறது.  

இந்நிலையில் நேற்று காலை காரப்பாக்கம் பகுதியில் உள்ள டீ கடையில் நின்றுகொண்டிருந்த முரளியை இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர் ஒருவர் அரிவாளால் சரமாரியாக வெட்டியுள்ளார். இதில் சம்பவ இடத்திலேயே முரளி பரிதாபமாக உயிரிழந்தார். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் முரளியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும் இது ஆணவக் கொலையாக இருக்கலாம் என்ற கோணத்திலும் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.
 

Leave Comments

Comments (0)