தென்மேற்கு பருவமழை வெள்ளப்பெருக்கை தாங்குமா கேரளா அணைகள் ?

/files/detail1.png

தென்மேற்கு பருவமழை வெள்ளப்பெருக்கை தாங்குமா கேரளா அணைகள் ?

  • 0
  • 0

-ஷாஜூ சாக்கோ

கேரளாவில் பெரும்பான்மையான அணைகள் 70 சதவீதம் நிரம்பி விட்ட நிலையில் அங்கு தொடர்ந்து மழை பெய்து வருகிறது.  கோட்டயத்தை தலைமையிடமாக கொண்ட அணை பாதுகாப்பு அமைப்பு கேரளாவில் உள்ள 58 அணைகளை தொடர்ந்து கண்காணித்து வருகிறது.  பலத்த மழை அணைகளை திறந்து விடும் நிலைக்கு தள்ளி இருக்கிறது.

மலம்புழா

alt text
 
கேரளாவின் மிகப்பெரிய அணையான  மலம்புழா அணை ஜூலை 20 அன்று 113 மீட்டராக இருந்தது.  அணையை திறக்காமல் 115 மீட்டர் அளவு வரை தண்ணீரை தேக்கலாம். தற்போது இந்த அணையில் இருந்து தண்ணீர்  திறந்து விடப்பட்டு வருகிறது.  நான்கு வருடங்களுக்கு பிறகு இந்த வருடம் அணை நிரம்பவுள்ளது.

இடுக்கி
 alt text
ஆசியாவிலேயே இரண்டாவது மிகப்பெரிய வளைவு அணையான‌ இடுக்கி அணை தற்போது 33 வருடங்களில் இல்லாத அளவுக்கு நீர் இருப்பு 2385 அடியாக உயர்ந்துள்ளது. அணையின் முழூ கொள்ளளவு 2403 அடியாகும். அணை நிரம்ப இன்னும் 18 அடி தான் தேவை.  தினமும் மூன்று அடி உயரும் அளவுக்கு அங்கு கனமழை பெய்கிறது.  இந்த அணை  சரித்திரத்திலேயே அதிக நீர் இருப்பு அளவை எட்ட உள்ளது.  17 வருடங்களாக இவ்வளவு அதிக மழை இங்கு பெய்ததில்லை.  1981லும் 1992லும் மட்டுமே இந்த அணையின் ஷட்டர்கள் திறக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டும் திறக்கப்பட்டால் அது அணை சரித்திரத்திலேயே மூன்றாம் முறையாக மட்டுமே இருக்கும். 

முல்லை பெரியார் 
alt text 


சுண்ணாம்பு சுர்க்கி கலவையில் கருங்கல்லால் கட்டப்பட்ட‌  எடையீர்ப்பு  (Masonry gravity  Dam) அணையான‌  முல்லை பெரியார் அணை 131.2 அடியை சென்ற புதனன்று (ஜூலை 18) எட்டியது. தினமும் சுமார் 2 அடி உயர்கிறது.    இது தற்போது 139 அடியை நெருங்கியிருக்கும்.  இன்னும் சில தினங்களில் அதன் எச்சரிக்கை அளவான 142 அடியை எட்டிவிடும். அதன் பின் அதன் முழூ நீர்வரத்தையும் திறந்து விட வேண்டிய நிலை வரும். கேரளா தரப்பில் அணையின் நீரை இப்போதே திறந்து விட கேட்டுகொண்டாலும் தமிழ்நாட்டின் அணை கமிட்டி பிரதி நிதிகள் அணை 142 அடியை எட்டும் வரை நீரை திறந்து விடக்கூடாது என்று கோரியுள்ளனர்.  இதனால் 142 அடியை எட்டினாலும் அணைக்கு எந்த பாதிப்பும் வராது என்று சுப்ரீம் கோர்ட்டில் நிறுவ முடியும். இதற்கு முன் 2014 நவம்பரிலும், 2015 டிசம்பரிலும் அணை 142 அடியை எட்டியிருந்தது.  152 அடி வரை அணையில் நீரை தேக்கி வைக்க தமிழ்நாட்டின் பிரதி நிதிகள்  கோரியிருந்ததும் குறிப்பிடத்தக்கது. 
alt text

alt text


கேரளாவில் வெள்ளம், நிலச்சரிவு, வீடுகள் கட்டிடங்கள் இடிந்து விழுவது என மக்கள் பெரும் அவதிப்பட்டு வருகிறார்கள் . பலரும் வீட்டில் குடியிருக்க முடியாமல் நிவாரண முகாம்களில் தங்கி வருகிறார்கள். 
கேரளாவில் இது வரை 41 பேர் மழை வெள்ளத்துக்கு பலியாகி இருக்கிறார்கள். ஒரு லட்சத்துக்கும் அதிகமானவர்கள் வெள்ள நிவாரண முகாம்களில்  தங்க வைக்கப்பட்டுள்ளனர். கேரளாவில் பல ஊர்களில் வெள்ளம் புகுந்து சாலைகள் வெள்ளக்காடாக காட்சி தருகிறது.  
 
 
 
இனி வரும் நாட்களிலும் கேரளாவில் கனமழை தொடரும் என்பது கவலையளிக்கிறது.   

செய்தி :  ஷாஜூ சாக்கோ, தனியார் வானிலை ஆய்வாளர். 
படங்கள் :  விக்கிபீடியா, மனோரமா ஆன்லைன்
 

Leave Comments

Comments (0)