ஜெய் ஸ்ரீ ராம் என்று சொல்லச் சொல்லி இஸ்லாமிய இணையர் மீது தாக்குதல்

/files/detail1.png

ஜெய் ஸ்ரீ ராம் என்று சொல்லச் சொல்லி இஸ்லாமிய இணையர் மீது தாக்குதல்

  • 0
  • 0

ஹரியானாவில் இஸ்லாமியச் சமூகத்தைச் சேர்ந்த இணையரை `ஜெய் ஸ்ரீ ராம்` என்று சொல்லச் சொல்லி இரண்டு பேர் கொண்ட கும்பல் தாக்குதல் நடத்தியுள்ளது.

கடந்த சனிக்கிழமையன்று (அக்டோபர் 05) ஹரியானா மாநிலம், ஆழ்வார் பகுதியில் இஸ்லாமியச் சமூகத்தைச் சேர்ந்த இணையர் உறவினர் ஒருவரின் வீட்டிற்குச் சென்றுவிட்டு தங்களது வீட்டிற்குத் திரும்பிக்கொண்டிருந்தனர். இதனிடையே ஆழ்வார் பேருந்து நிலையம் அருகில் உணவருந்துவதற்காக இருசக்கர வாகனத்தை நிறுத்தியுள்ளனர். அப்போது அங்கு வந்த இருவர் அந்த பெண்ணை பாலியல் ரீதியாகத் துன்புறுத்தி அவரின் கணவரை ஜெய் ஸ்ரீ ராம் என்று சொல்லச் சொல்லிக் கட்டாயப்படுத்தியுள்ளனர். அதற்கு அவர் மறுப்பு தெரிவிக்கவே அவர் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர்.

இதனையடுத்து இணையர் உதவிக் கோரி சத்தம் போட்டுள்ளனர்.  உடனே அருகிலிருந்த மக்கள் சம்பவ இடத்திற்கு வந்து குற்றவாளிகளைப் பிடித்துத் தாக்கி காவல்நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர். இந்த குற்றச்சம்பவத்தில் ஈடுபட்டது வான்ஷ் பரத்வாஜ் மற்றும் சுரேந்திர பாட்டியா ஆகிய இருவர் என்பது தெரியவந்ததை தொடர்ந்து அவர்கள் மீது காவல்நிலையத்திலும் புகார் அளிக்கப்பட்டது. அவர்கள் மீது 354A, 295A, 509,323,386 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் இருவரையும் கைது செய்துள்ளனர்.
 

Leave Comments

Comments (0)