ஈழத்தமிழர்கள் என்ற காரணத்திற்காகவே நியாயம் மறுக்கப்படும் கொடுமை

/files/detail1.png

ஈழத்தமிழர்கள் என்ற காரணத்திற்காகவே நியாயம் மறுக்கப்படும் கொடுமை

  • 3
  • 0

 

திருச்சி மத்திய சிறைச்சாலையில் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டு  உயிருக்குப் போராடிக்கொண்டிருக்கும் ஈழத்தமிழர்களை உடனடியாக மருத்துவமனையில் சேர்த்து அவர்களின் உயிர்களைக் காப்பாற்ற வேண்டும் என்று மே 17 இயக்க தோழர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இது தொடர்பாக இன்று அவர்கள் வெளியிட்ட செய்திக்குறிப்பில்”திருச்சி மத்திய சிறைச்சாலையில் எந்தவித வழக்குமில்லாமல் கடந்த ஏழு வருடங்களாக 70க்கும் மேற்பட்ட ஈழத்தமிழர்கள் சிறப்பு முகாம் என்ற சித்ரவதை முகாமில் தமிழக அரசால் அடைக்கப்பட்டிருக்கிறார்கள். தங்கள் மீது எந்தவொரு வழக்குமில்லை பின் ஏன் எங்களை அடைத்து வைத்திருக்கிறீர்கள் என்று நியாயம் கேட்டு இந்த ஏழு வருடங்களில் பல தடவை கோரிக்கைகள் வைத்தும் எதுவும் பலனளிக்காத காரணத்தால், நேற்று (நவம்பர் 08) முதல் ’விடுதலை அல்லது சாவு’ என்ற கோரிக்கையுடன் உண்ணாவிரதம் இருக்க முடிவு செய்திருக்கின்றனர்.

இதைத் தமிழகக் காவல்துறை அடக்க நினைத்தபோது வேறு வழியின்றி 19 பேர் இன்று (ஆகஸ்ட் 08) தற்கொலை முயற்சியில் ஈடுபட்டு உயிர்போகும் நிலையில் சிறையிலேயே இருப்பதாகத் தகவல் வருகிறது. மேலும் இவர்களுக்கு இதுவரை எந்த சிகிச்சையும் அளிக்காமல் வேண்டுமென்றே காவல்துறை காலம் கடத்துவதாகவும் செய்திகள் வருகிறது.

ஆகவே தமிழக அரசு உடனடியாக இந்த பிரச்னையில் தலையிட்டு உயிருக்குப் போராடிக்கொண்டிருக்கும் ஈழத்தமிழர்களை உடனடியாக மருத்துவமனையில் சேர்த்து அவர்களின் உயிர்களைக் காப்பாற்ற வேண்டுமெனவும், எந்தவித வழக்குமில்லாமல் ஏழு ஆண்டுகளாகச் சிறையிலிருக்கும் 70க்கும் மேற்பட்ட ஈழத்தமிழர்களை உடனடியாக விடுதலை செய்யவேண்டுமெனவும் மே பதினேழு கேட்டுக்கொள்கிறது” என்று குறிப்பிட்டுள்ளனர்.
 

Leave Comments

Comments (0)