மனித கழிவை மனிதனே அள்ளுவது தேசிய அவமானம்- இயக்குனர் பிரம்மா

/files/detail1.png

மனித கழிவை மனிதனே அள்ளுவது தேசிய அவமானம்- இயக்குனர் பிரம்மா

  • 0
  • 0

சுதந்திரம் பெற்று இத்தனை ஆண்டுகள் கடந்த பின்னரும், மனித கழிவுகளை மனித அள்ளும் இழிவு நிலை இன்றும் நீடிக்கிறது என்பது தேசிய அவமானம் என்று இயக்குனர் பிரம்மா தெரிவித்துள்ளார்.டிரெ

”சுதந்திரம் பெற்று இத்தனை ஆண்டுகள் கடந்த பின்னரும், மனித கழிவுகளை மனித அள்ளும் இழிவு நிலை இன்றும் நீடிக்கிறது. நாட்டில் இருக்கக்கூடிய பல்வேறு பிரச்னைகளை போல இந்த பிரச்னையையும் பார்க்கமுடியாது. இது ஒரு தேசிய அவமானம். இந்த பிரச்னையை எப்போதே நம்மால் சரி செய்திருக்க முடியாது. அரசும் பொதுமக்களும் திட்டமிட்டு அஜாக்கிரதையாக இருக்கிறோம். இதற்காக ஒரு இயந்திரம் கண்டுபிடிக்கப்படவில்லை. கண்டுகொள்ளாமல் இருக்கக்கூடிய முக்கிய பிரச்னையாக இது இருந்துவருகிறது.

இதற்குப் பின்னால் சாதி இயங்கிக்கொண்டிருக்கிறது என்பத்தைதான் நாம் முக்கியமாகப் பார்க்கவேண்டியிருக்கிறது. குறிப்பிட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்களாக இவர்கள் இருக்கிறார்கள் என்ற ஒரே காரணத்திற்காக அந்த வேலையைச் செய்ய ஏவுகிறோம்.  இது மாற வேண்டிய கட்டாயத்தில் நாம் இருக்கிறோம். இதற்கு மேலும் இதைப் பொறுத்துக்கொண்டிருக்க முடியாது. அரசு மாறிக்கொண்டேதான் இருக்கும். ஆனால் அந்த பிரச்னை அப்படியேதான் இருக்கும் என்று சொன்னால் அப்படிப்பட்ட அரசாங்கம் நமக்குத் தேவை இல்லை” என்று தெரிவித்துள்ளார்.

Leave Comments

Comments (0)