சூட் அணிந்ததற்காகத் தலித் இளைஞனைத் தாக்கிய இஸ்லாமியக் கும்பல்

/files/detail1.png

சூட் அணிந்ததற்காகத் தலித் இளைஞனைத் தாக்கிய இஸ்லாமியக் கும்பல்

  • 0
  • 0

குஜராத் மாநிலத்தில் தலித் சமூகத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் சூட் அணிந்தார் என்பதற்காக அவர் மீது தாக்குதல் நடத்தியிருக்கிறது இஸ்லாமியச் சமூகத்தைச் சேர்ந்த கும்பல் ஒன்று.

குஜராத்தில் கடந்த 27ஆம் தேதி தலித் சமூகத்தைச் சேர்ந்த 27 வயது மதிக்கத்தக்க இளைஞன் ஒருவர் டீக்கடையில் நின்று டீ குடித்துக்கொண்டிருந்தார். அவர் சூட் அணிந்திருந்ததாகக் கூறப்படுகிறது. அப்போது இருசக்கர வாகனத்தில் அங்கு வந்த இஸ்லாமிய மதத்தைச் சேர்ந்த அம்ஜத், அஸ்கர் பதான் ஆகிய இருவரும் தலித் இளைஞனைத் தாக்கியுள்ளனர். சாதிப் பெயரைக் குறிப்பிட்டு, “ஒடுக்கப்பட்ட சாதியைச் சேர்ந்த நீயெல்லாம் சூட் அணியக் கூடாது. அப்படி அணிந்தால் கொலை செய்துவிடுவோம்” என்று மிரட்டியும், தாக்கியும் உள்ளனர்.

இதனையடுத்து அந்த இளைஞன் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். எஸ்.சி / எஸ்.டி வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டபோதிலும், இன்னும் குற்றவாளிகள் கைது செய்யப்படவில்லை.
 

Leave Comments

Comments (0)