மனித கழிவை மனிதனே அகற்றுவது இந்தியாவைத் தவிர உலகத்தில் எந்த நாட்டிலும் புழக்கத்தில் இல்லை- இயக்குனர் ராம்

/files/detail1.png

மனித கழிவை மனிதனே அகற்றுவது இந்தியாவைத் தவிர உலகத்தில் எந்த நாட்டிலும் புழக்கத்தில் இல்லை- இயக்குனர் ராம்

  • 0
  • 0

இன்றளவிலும் இந்தியாவில் மலம் அள்ளுவது ஒரு சாதி பிரிவினரின் தொழிலாக இருப்பது என்பது அரச பயங்கரவாதம் என்று இயக்குனர் ராம் தெரிவித்துள்ளார்.

”மனித கழிவை மனிதனே அகற்றுவது என்பது இந்தியாவைத் தவிர உலகத்தில் எந்த நாட்டிலும் புழக்கத்தில் இல்லை. அதுவும் ஒரு குறிப்பிட்ட சாதி பிரிவினர் மட்டுமே அத்தொழிலைச் செய்யக் கூடிய சாதிய பண்பாடுதான் இந்தியப் பண்பாடாக இருக்கிறது. 1993ஆம் ஆண்டு முதல் மனித கழிவை மனிதனே அள்ளும் அவலம் இந்தியாவில் இல்லை என்று இந்திய அரசு பாராளுமன்றத்திலும், உலக அரங்கிலும், ஐநாவிலும் சொல்லிக்கொண்டிருக்கிறது.

ஆனால் நாம் தினந்தினம் சாலையில் நடந்துசெல்லும்போது சாக்கடையில் யார் இறங்குகிறார்கள் என்று பார்த்துக்கொண்டுதான் இருக்கிறோம். இந்திய அரசாங்கம் சொல்வது பச்சைப் பொய். என்கவுண்டர் நடத்துவது மட்டும் அரச பயங்கரவாதம் இல்லை. இந்த மாதிரியான பச்சைப் பொய்களும் அரசபயங்கர வாதம்தான். 

alt text

இன்னும் இந்தியாவில் மலம் அள்ளுவது ஒரு சாதி பிரிவினரின் தொழிலாக இருப்பது அரச பயங்கரவாதம். இந்தியா சுத்தத்தைப் பற்றிப் பேசுகிறது. தூய்மை இந்தியா திட்டம் குறித்து இங்குப் பேசப்படுகிறது. மகாத்மா காந்தியை வைத்து திரையரங்குகளில் விளம்பரம் செய்யப்படுகிறது. அந்த விளம்பர நிறுவனம் எவ்வளவு சம்பாதித்திருக்கும் என்று தெரியவில்லை. கழிவறை கட்டுவதற்கான ஒப்பந்தத்தில் எவ்வளவு சம்பாதித்திருப்பார்கள் என்று தெரியவில்லை. கழிவறை கட்டினால் சுத்தம் வந்துவிடுமா என்று கேட்டால், இல்லை. அந்த கழிவறையை யாராவது சுத்தம் செய்யவேண்டிய கட்டாயம் இருக்கிறது. அப்போது கழிவறையை யார் தான் சுத்தம் செய்வார்கள் என்றால், மற்ற நாடுகளில் அதற்கான அறிவியல் கருவிகளை வைத்து நவீனப் படுத்தியிருக்கிறார்கள். இங்குச் சுத்தம் செய்யும் தொழிலில் ஈடுபடும் சாதியினருக்கு மாற்றுத் தொழிலை, மாற்று வாழ்கையைக் கொடுத்துவிட்டு துப்புரவு தொழிலை விஞ்ஞான பூர்வமாக மாற்றுவதுதான் சரியான முன்னேற்றம். அதுதான் நாடு முன்னேறியிருக்கிறது என்பதின் அடையாளம். இதைச் செய்யாதவரை இந்திய அரசு என்பது காட்டுமிராண்டித் தனமான அரசு” என்று தெரிவித்துள்ளார்.

Leave Comments

Comments (0)