வானிலைப் போர் 3 - மழை எப்படி பெய்கிறது, வானிலையை கட்டுப்படுத்த பணக்கார நாடுகள் முயல‌ காரணம் என்ன?

/files/detail1.png

வானிலைப் போர் 3 - மழை எப்படி பெய்கிறது, வானிலையை கட்டுப்படுத்த பணக்கார நாடுகள் முயல‌ காரணம் என்ன?

  • 1
  • 0

-ஷாஜீ  சாக்கோ

மழை எப்படி பெய்கிறது,  வானிலையை கட்டுப்படுத்த பணக்கார நாடுகள் முயல‌  காரணம் என்ன ?   அமேரிக்கா நடத்திய ப்ராஜெக்ட் சிர்ரஸ்  வெற்றி பெற்றதா என்பதைப்பற்றி  சென்ற இரு பகுதிகளில் விளக்கியிருந்தேன்.   இனி அதன் தொடர்ச்சியை பார்ப்போம்.

Bernard Vonnegut  என்ற விஞ்ஞானி தான் சில்வர் அயோடய்ட் என்ற இரசாயனம் க்ளவுட் சீடிங்கிற்கு அதிக பயனுள்ளது என்று கண்டறிந்தார்.     உலர்ந்த பனியை விடவும் க்ளவுட் சீடிங் செய்ய சில்வர் அயோடைட் என்ற இரசாயனம்  தான் உகந்தது. இதை புகையாக மாற்றியும் மேகங்களின் மேல் தூவலாம்.    க்ளவுட் சீடிங்கை விமானம் மூலம் மட்டுமல்லாது தரையில் இருந்து சில்வர் அயோடைடை புகையாக்கி வானில் செலுத்தியும் மழையை வரவழைக்கலாம். உயர்ந்த மலை பகுதிகளில் இருந்தும் மேல் நோக்கி காற்று வீசும் இடங்களில் இருந்தும் க்ளவுட் சீடிங்   பரிசோதனைகளை செய்யலாம். 

 மேகங்களின் குளிர்ந்த நிலையை பொறுத்து க்ளவுட் சீடிங் செய்த இடத்தில் மட்டுமல்லாது பல கிலோமீட்டர்கள் தள்ளியும் கூட அதன் பாதிப்பு இருக்கும்.  இது போன்ற பரிசோதனைகளால் க்ளவுட் சீடிங் செய்த இடத்தில் இருந்து முன்னூறு நானூறு கிலோ மீட்டருக்கு அப்பால் கூட‌ கனமழை பெய்து பேரழிவுகளை ஏற்படுத்த‌  வாய்ப்புண்டு.   அணுகுண்டை க்ளவுட் சீடிங் செய்யப்பட்ட மேகங்களில் வெடிக்க செய்வதன் மூலம் அதன் கதிர்வீச்சை இன்னும் அதிக தூரத்திற்க்கு பரவச்செய்து பேரழிவுகளை ஏற்படுத்தி எதிரிகளை அழிக்க முடியும். 
 
 க்ளவுட் சீடிங் செய்யும் விமானம்

சில்வர் அயோடைட் மூலம் க்ளவுட் சீடிங் செய்வதால் ஆலங்கட்டி மழை பெய்வதாகவும் அது திடீரென்று மிக கனத்த மழையை தந்து வெள்ள அபாயத்தையும் தோற்றுவிப்பதாக பலரும் புகார் தெரிவித்தனர். 

மேகங்களின் குளிர்ந்த நிலை, அடர்த்தியை பொறுத்து க்ளவுட் சீடிங் செய்த இடத்தில் மட்டுமல்லாது பல கிலோமீட்டர்கள் தள்ளியும் கூட அதனால் மழை பெய்யும். 

க்ளவுட் சீடிங்கை விமானம் மூலம் மட்டுமல்லாது தரையில் இருந்து சில்வர் அயோடைடை புகையாக்கி வானில் செலுத்தியும்  (pumping) மழையை வரவழைக்கலாம். 

alt text
 

உயர்ந்த மலை பகுதிகளில் இருந்தும் மேல் நோக்கி காற்று வீசும் இடங்களில் இருந்தும் இது போன்ற பரிசோதனைகளை செய்யலாம்.  ஆனால் க்ளவுட் சீடிங் முறையில் மழையை குறிப்பிட்ட ஒரு நிலப்பரப்பில் திட்டமிட்டபடி பெய்ய வைப்பது என்பது  பெரும் சவாலான விஷயமாகும்.
பாப்புலர் சயின்ஸ் என்ற பத்திரிகை   மார்ச் 1950 பதிப்பில் க்ளவுட் சீடிங் செய்த பிறகு மேகங்களுக்கு மேல் இருந்து எடுக்கப்பட்ட படத்தை வெளியிட்டு   அதை  துளைக்கப்பட்ட மேகம் என்று வர்ணித்தது.  

alt text
 
ஆகஸ்ட் 15, 1952ல் பிரிட்டனில் பெரும் வெள்ளம் வந்து லின்மவுத்  (Lynmouth) என்ற ஊரில் பெரும் நாசத்தை உண்டாக்கியது.  அப்போது பெய்த மழையானது வழக்கத்தை விட 250 மடங்கு அதிகம் பெய்தது.  ஒன்பது லட்சம் ஏக்கர் விளை நிலங்கள் வெள்ளத்தால் மூழ்கின‌.  வீடுகள் பாலங்கள் கடைகள் வெள்ளத்தில் அடித்து சென்றன. வெள்ளத்தில் சிக்கி  முப்பத்தினான்கு பேர் உயிரிழந்தனர்.  அந்த பேரிடரை “கடவுளின் கை” (The Hand of God)  என்று பிரிட்டன் அரசால் பெயரிடப்பட்டது.  

ஆனால்  2001ல் பிபிசி 4 என்ற வானொலி,  பிரிட்டனின்  விமானப்படை (RAF) ராயல் ஏர் போர்ஸ்  க்ளவுட் சீடிங் பரிசோதனையை இரகசியமாக செய்ததை அம்பலப்படுத்தியது. 

RAF விஞ்ஞானிகள் குழுவுடன் வெள்ளம் வந்த சில நாட்களுக்கு முன் அங்கு க்ளவுட் சீடிங் சோதனை நடத்தியதற்க்கான ஆவணங்களும் ஆதாரங்களும் கிடைத்திருப்பதாக தெரிவித்தது.   அந்த சோதனைகளுக்கு  ப்ராஜெக்ட் குமுலஸ் (Cumulus) என்று ராயல் ஏர் போர்ஸ்  பெயரிடப்பட்டிருந்தது.   அடத்தியான மேகத்தை ஆங்கிலத்தில் குமுலஸ் என்று அழைப்பார்கள்.   
யுத்தத்தில் எதிரிகளை மழையை ஏற்படுத்தி நகர விடாமல் செய்யவும்,  வெள்ளம் ஏற்படுத்தி ஆற்றை கடக்க முடியாமல் செய்யவும் இந்த பரிசோதனைகளை செய்ததாகவும்  அந்த பெருவெள்ளத்திற்க்கு பிறகு அந்த ப்ராஜெக்ட் கைவிடப்பட்டதாகவும் அந்த ஆவணங்கள் மூலம் தெரிய வந்தது.   ஆனாலும் இந்த பரிசோதனைகளால் வெள்ளம் வரவில்லை என்று அரசுத்தரப்பு மறுத்து விட்டது.   

இது ஊடகங்களில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.  இது இன்றளவும் புதிராகவே இருக்கிறது.  பமீலா வாஸ் (Pamela Vass) என்ற நாவலாசிரியர் இந்த நிகழ்வுகளை அடிப்படையாக கொண்டு 2011ல் சீட்ஸ் ஆப் டவுட் (Seeds of Doubt)   என்ற நாவலை எழுதினார். 

அமேரிக்காவின் ப்ராஜெக்ட் சிர்ரஸுக்கு பிறகு சில்வர் அயோடைட் பரவலாக க்ளவுட் சீடிங்கிற்கு பயன்படுத்தப்பட்டது.  சூறாவளிகளை மாற்ற அறிவியல்பூர்வமான வழிகளை ஆராய்வதை நோக்கமாக கொண்டு  1955ல் National Hurricane Research Project என்ற திட்டத்தை அமேரிக்கா தொடங்கியது.  ஆகஸ்ட் 1958ல் டெய்ஸி சூறாவளியின் கண்ணின் வெளிச்சுவரில் க்ளவுட் சீடிங்கை செய்து பார்த்தது.  ஆனால் இந்த பரிசோதனையில் அமேரிக்காவால் தீர்க்கமான முடிவுகளை  எட்ட முடியவில்லை.  

பின் செப்டம்பர் 16, 1961ல்  மிகப்பெரிய அளவில் எட்டு சிலிண்டர் சில்வர் அயோடைடை எஸ்தர் சூறாவளியின் கண்ணில் தூவியது.

alt text 
 
எஸ்தர் சூறாவளியின் கண்

இதனால் சூறாவளி 10% அளவுக்கு பலமிழந்ததாக ஆய்வில் தெரிய வந்தது. அடுத்த நாள் மேலும் சில விமானங்களை  அனுப்பியதென்றாலும் இம்முறை சூறாவளியின் கண்ணில் சில்வர் அயோடைடை தூவ முடியவில்லை. ஆனாலும் சோதனை வெற்றியடைந்ததாக அறிவித்தது. 

இந்த‌ வெற்றியை தொடர்ந்து அமேரிக்கா சூறாவளிகளை கட்டுப்படுத்தும் இன்னொரு திட்டத்தை 1962ல் தொடங்கி பல வழிகாட்டுதல்களையும் நெறி முறைகளையும் அமைத்தது.  இது மிகப்பெரிய சூறாவளிகளை கட்டுப்படுத்த ஏற்படுத்தப்பட்ட ஆராய்ச்சி திட்டமாகும்.   இந்த திட்டம் வெற்றி பெற்றதா ?.  அடுத்த வாரம் பார்ப்போம்.

Leave Comments

Comments (0)