தலித் இளைஞர்கள் மீது இந்து முன்னணியினர் தாக்குதல்

/files/detail1.png

தலித் இளைஞர்கள் மீது இந்து முன்னணியினர் தாக்குதல்

  • 0
  • 0

காவேரிப்பாக்கத்தில் கள்ளசாரயம் காய்ச்சிவந்த இந்து முன்னணியினரை அம்பலப்படுத்தியதற்காகத் தலித் சமூகத்தைச் சேர்ந்த இளைஞர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டிருக்கிறது. 

அத்திப்பட்டு சேரிப்பகுதியில் நேற்று (அக்டோபர் 27)  மாலை 5 மணியளவில் அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் வெடிவெடித்துக் கொண்டிருந்தனர். அப்போது  காவேரிப்பாக்கத்திலிருந்து இந்து முன்னணியைச் சேர்ந்தவர்கள் ஆயுதங்களுடன் 10 இருசக்கர வாகனத்தில் வந்து ”நீங்கலெல்லாம் எங்களையாடா எதுக்குறீங்க” என்று கூறிக்கொண்டே வெடிவெடித்துகொண்டிருந்தவர்கள் மீது கொலைவெறி தாக்குதல் நடத்தியுள்ளனர்.  படுகாயமடைந்த தலித் சமூகத்தைச் சேர்ந்த இளைஞர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருகின்றனர்.

தாக்குதல் நடத்திய குண்டர்கள் மீது ஏற்கனவே எஸ்.சி/எஸ். டி வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனாலும் காவல்துறையினர் இதுவரை அவர்களை கைது செய்யவில்லை.

காவேரிப்பாக்கத்தில் கள்ளசாரயம் காய்ச்சிவந்த இந்து முன்னணியினரை காவல் துறையில் தலித் சமூகத்தைச் சேர்ந்த இளைஞர்கள் அம்பலப்படுத்தியதால் இந்த தாக்குதல் சம்பவத்தை இந்து முன்னணியினர் நடத்தியிருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave Comments

Comments (0)