அசுரன் திரைப்படத்தை இயக்கிய வெற்றிமாறன் மீது இந்து அமைப்பினர் புகார்

/files/detail1.png

அசுரன் திரைப்படத்தை இயக்கிய வெற்றிமாறன் மீது இந்து அமைப்பினர் புகார்

  • 0
  • 0

 

சமீபத்தில் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்றுவரும் அசுரன் திரைப்படத்தை இயக்கிய இயக்குனர் வெற்றிமாறன் மீது அகில பாரத இந்து மகா சபாவைச் சேர்ந்தவர்கள் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

எழுத்தாளர் பூமணியின் 'வெக்கை'  நாவலை மையமாகக்கொண்டு அசுரன் திரைப்படத்தை இயக்குனர் வெற்றிமாறன் இயக்கியுள்ளார். தனுஷ், மஞ்சு வாரியர், கென் கருணாஸ், அபிராமி, பாலாஜி சக்திவேல் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படம் அக்டோபர் 04ஆம் தேதி தமிழகம் முழுவதும் வெளியாகியது. சாதிய ரீதியிலான ஒடுக்குதலை இப்படம் பேசுவதால் பலரும் இப்படத்தைப் பாராட்டிவருகின்றனர்.

இந்நிலையில், அசுரன் திரைப்படம் தமிழகத்தில் ஒற்றுமையைச் சீரழிக்கும் வகையில் இருக்கிறது. வன்முறை நிறைந்த படமாக இருப்பதால் அந்த படத்தை இயக்கிய வெற்றிமாறன், நடிகர் தனுஷ், தயாரிப்பாளர் தானு ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் இரா.பாண்டிய ராஜனிடம் அகில பாரத இந்து மகா சபாவினர் புகார் அளித்துள்ளனர்.

மக்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுவரும் இப்படம் தமிழகத்தில் ஒற்றுமையைச் சீரழிக்கும் வகையில் இருக்கிறது என்று பாரத இந்து மகா சபாவினர் கூறியதற்குப் பலரும் கண்டம் தெரிவித்துவருகின்றனர்.

Leave Comments

Comments (0)