மத வெறுப்பின் காரணமாகத் தனது மகள் உயிரிழந்திருக்கிறாள்- பாத்திமா லத்தீப்பின் பெற்றோர்

/files/detail1.png

மத வெறுப்பின் காரணமாகத் தனது மகள் உயிரிழந்திருக்கிறாள்- பாத்திமா லத்தீப்பின் பெற்றோர்

  • 0
  • 0

 

மதரீதியாகத் துன்புறுத்தப்பட்டதால் நான் மன உலைச்சலுக்கு ஆளாக்கப்பட்டேன் என்று சென்னை ஐஐடியில் தற்கொலை செய்துகொண்ட மாணவி பாத்திமா லத்தீப் தனது செல்போனில் பதிவு செய்திருக்கிறார்.

சென்னை ஐஐடியில் சமூகவியல் துறையில் முதலாமாண்டு படித்து வந்தவர் முதுகலை மாணவி பாத்திமா லத்தீப். கேரள மாநிலம் கொல்லத்தைச் சேர்ந்த இவர் கடந்த 9ஆம் தேதி ஐஐடியில் உள்ள பெண்கள் விடுதியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.  தேர்வில் மதிப்பெண் குறைந்ததால் பாத்திமா தற்கொலை செய்துகொண்டார் என்று முதலில் செய்திகள் பரவிவந்தது. ஆனால் அது புரளி என்று தற்போது வெளியாகியிருக்கும் செய்தி உணர்த்துகிறது. மாணவி பாத்திமாவின் செல்போனில் பாத்திமா, தான் இறப்பதற்கு முன்னர் ஒரு செய்தியைப் பதிவு செய்துள்ளார். அதில், ”சென்னை ஐஐடி பேராசிரியர் சுதர்சன பத்மநாபன் உள்ளிட்ட மூன்று  பேர் தன்னை மத ரீதியாகத் துன்புறுத்தி மன உலைச்சல் ஏற்படுத்தினர்” என்று குறிப்பிட்டுள்ளார்.

நாட்டில் நிலவிவரும் மத வெறுப்பின் காரணமாக தமது மகள் உயிரிழந்திருக்கிறாள் என பாத்திமாவின் பெற்றோர் தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் தொடர்பாகக் காவல் ஆணையர் ஏ.கே. விஸ்வநாதன் விசாரணை மேற்க்கொண்டுவருகிறார். 

Leave Comments

Comments (0)