ஜப்பானில் கனமழை: 38 பேர் பலி

/files/detail1.png

ஜப்பானில் கனமழை: 38 பேர் பலி

  • 0
  • 0

-கருப்பு 

ஜப்பானில் பெய்துவருகின்ற கனமழையால் அங்கு வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் சிக்கி இதுவரை  38 பேர் உயிரிழந்துள்ளனர்.

ஜப்பான் நாட்டின் தென்மேற்கு பகுதியில் உள்ள ஹிரோஷிமா, கியாட்டோ, ஒக்காயாமா, எஹிமே உள்ளிட்ட மாகாணங்களில் கடந்த 48 மணி நேரமாகக் கனமழை பெய்து வருகிறது. 2 மாதங்களில் பெய்யக் கூடிய மழை, மூன்றே நாட்களில் பொழிந்து தள்ளியதால், 111 சென்டிமீட்டர் மழை பதிவானது. சாலைகளில் தேங்கிய வெள்ள நீர், சில இடங்களில் சாலையையே பெயர்த்துச் சென்றது. சில இடங்களில் மக்கள் வசிக்கும் பகுதிகளில் 16 அடி உயரம்வரை நீர்மட்டம் உயர்ந்துள்ளது. தாழ்வான பகுதிகளில் வசித்துவந்த சுமார் 50 லட்சம் மக்கள் வெளியேற்றப்பட்டு, பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

வெள்ளத்தில் மூழ்கியும், நிலச்சரிவுக்குள் சிக்கியும் பலியானோர் எண்ணிக்கை இன்று 38 ஆக உயர்ந்துள்ளது. காணாமல் போன சுமார் 50 பேரைத் தேடும் பணிகளில் ராணுவம் மற்றும் பேரிடர் மீட்புப் படையினர் ஈடுபட்டு வருகின்றனர். 

Leave Comments

Comments (0)