ஹரியானாவில் பெண்ணை கூட்டுப்பாலியல் வன்கொடுமை செய்த மூவரில் ஒருவர் கைது

/files/detail1.png

ஹரியானாவில் பெண்ணை கூட்டுப்பாலியல் வன்கொடுமை செய்த மூவரில் ஒருவர் கைது

  • 0
  • 0

ஹரியானாவில் திருமணமான பெண் ஒருவரை மூன்று பேர் சேர்ந்த கும்பல் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்து சாலையில் போட்டுச் சென்ற சம்பவம் நடந்திருக்கிறது.

ஹரியானா மாநிலம், சோனிபட் மாவட்டம், முர்தால் பகுதியைச் சேர்ந்தவர் சசி. இவர் தனது கணவர் மற்றும் மகளுடன் வாழ்ந்துவருகிறார். இந்நிலையில் கடந்த சனிக்கிழமை ( அக்டோபர் 05) சசி தனது குடும்பத்தினருடன் முர்தால் பகுதியில் உள்ள உணவகத்திற்கு உணவருந்தச் சென்றுள்ளனர். முர்தால் சாலையோரம் உணவகங்களுக்குப் பெயர் பெற்றது. அங்கு உணவருந்திவிட்டு திரும்பிகொண்டிருந்தபோது அவர்களின் இருசக்கர வாகனத்தில் பெட்ரோல் தீர்ந்த நிலையில், வாகனம் பாதியிலேயே நின்றுவிட்டது. இதனால் அவர்கள் நடந்து செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. 

சசியின் கணவரும், மகளும் வேகமாகச் சென்றுவிட்ட நிலையில், அவர்களின் பின்னால் சசி மெதுவாக வந்துகொண்டிருந்தார். அப்போது மூன்று பேர்கொண்ட கும்பல் லாரியில் வந்து சசியைக் கடத்தி சென்று கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்து முர்தாலில் உள்ள சாலையில் வீசிவிட்டுச் சென்றுள்ளனர்.

இதனையடுத்து பாலியல் வன்கொடுமை செய்த விஜய், சோனு, சுமேர் ஆகிய மூன்று பேர் மீதும் சசி காவல்நிலையத்தில் புகார் அளித்தார். அதில் ஷிலா கெரியை சேர்ந்த விஜயை மட்டும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். அவர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு போலீஸ் காவலில் வைக்கப்பட்டுள்ளார். மற்ற இரு குற்றவாளிகளை காவல்துறையினர் தேடிவருகின்றனர்.

Leave Comments

Comments (0)