புழுதி புயல்: 100- ஐ தாண்டிய பலி எண்ணிக்கை!

/files/detail1.png

புழுதி புயல்: 100- ஐ தாண்டிய பலி எண்ணிக்கை!

  • 0
  • 0

-வித்யா

புழுதி புயல்: 100- ஐ தாண்டிய பலி எண்ணிக்கை!

வட மாநிலங்களில் ஏற்பட்ட புழுதி புயலில் சிக்கி 100க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

வடமாநிலங்களான ராஜஸ்தான், உத்தரப்பிரதேசம், உத்தரகாண்ட், பஞ்சாப், மத்தியப்பிரதேசம் ஆகிய பகுதிகளில் நேற்று (மே 02)  இரவு புழுதி புயல் தாக்கியது. இதனால் உத்திரபிரதேசத்தில் மட்டும் 64 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 60க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆக்ரா மாவட்டத்தில் இதுவரை 40-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். ராஜஸ்தானில் 31 பேர் உயிரிழந்துள்ளனர். ஜார்க்கண்ட், உத்தரகாண்ட், பஞ்சாப், மத்தியப்பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் தலா 2 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த புயலால் மின் கம்பங்கள், மரங்கள் சாய்ந்து கிடைப்பதோடு வடமாநிலங்களின் பல பகுதிகளில் மிகுந்த அவதிக்கு ஆளாகியுள்ளனர்.

புழுதி புயலால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் விரைந்து அளிக்கும்படி அந்தந்த மாநில அரசு அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது.

 ராஜஸ்தானில், முதல் மந்திரி வசுந்தரா ராஜே உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்தார்.உயிரிழந்தவர்களுக்கு  ரூ.4 லட்சமும், 60 சதவீத காயமடைந்தோருக்கு ரூ.2 லட்சமும் மற்றும் 40 முதல் 50 சதவீத காயமடைந்தோருக்கு ரூ.60 ஆயிரமும் வழங்கப்படும் என்று கூறியுள்ளார்.

\r\n

Leave Comments

Comments (0)