5 நாட்களுக்குக் கனமழை: இந்திய வானிலை மையம்!

/files/detail1.png

5 நாட்களுக்குக் கனமழை: இந்திய வானிலை மையம்!

  • 0
  • 0

-வித்யா

தமிழகம் உட்பட பல்வேறு மாநிலங்களில் அடுத்த ஐந்து நாட்களுக்குப் பலத்த காற்றுடன் கூடிய கன மழை பெய்யும் என இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.

கடந்த சில நாட்களாகவே வட மாநிலங்களான ராஜஸ்தான், உத்தரப்பிரதேசம், உத்தரகாண்ட, பஞ்சாப், மத்தியப்பிரதேசம் ஆகிய பகுதிகளில் புழுதி புயலும் சில இடங்களில் மழையும் பெய்துவருகிறது. இதில் சிக்கி நூற்றுக்கணக்கான மக்கள் இறந்துள்ளனர். தமிழகத்தைப் பொறுத்தவரையில் கோடைக்காலம் தொடங்கியது முதல் வெயில் வாட்டி வதைத்து வருகிறது. இந்நிலையில் நேற்று திருச்சி, மதுரை, விருதுநகர், பெரம்பலூர், திண்டுக்கல், தேனீ, நாகை போன்ற மாவட்டங்களில் பலத்த மழை பெய்தது. இதனால் சற்று குளிர்ச்சி நிலவியதால் மக்கள் மகிழிச்சியடைந்தனர். 

                                                                                 alt text

இந்நிலையில்,  இன்று இந்திய வானிலை மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “கேரளா அருகே ஏற்பட்டுள்ள மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகம், கேரளா, கர்நாடகம் போன்ற மாநிலங்களில் அடுத்த 5 நாட்களுக்குப் பலத்த காற்றுடன் கனமழை பெய்யும். இன்று மேற்கு வங்கம், சிக்கிம் உள்ளிட்ட பகுதிகளில் காற்றின் வேகம் 50 முதல் 70 கிலோமீட்டர் வேகத்தில் இருக்கும். இதனால், இடி, மின்னலுடன் பெரும் கனமழை பெய்யக்கூடும். இதே நிலை ஜார்கண்ட், ஆந்திரா, கர்நாடகா, கேரளா உட்படத் தென்மாநிலங்களில் நீடிக்கும். ராஜஸ்தானில் புழுதி புயல் ஏற்படும்.

தமிழகத்தைப் பொறுத்தவரையில், 13 மற்றும் 14 ஆகிய தேதிகளில் மழையின் தாக்கம் அதிகமாக இருக்கும். வடகடலோர மாவட்டங்களான சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம் மாவட்டங்களில் இப்போதைக்கு மழைக்கு வாய்ப்பு இல்லை. குறிப்பாக பீகார், ஜார்கண்ட், ஒடிசா, அசாம், மேகலாயா, நாகலாந்து, மணிப்பூர், மிசோரம், திரிபுரா, கடற்கரை ஒட்டியுள்ள கர்நாடகா, புதுச்சேரி, தமிழ்நாடு, கேரளா ஆகிய மாநிலங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும்“ என தெரிவித்துள்ளது.

\r\n

Leave Comments

Comments (0)