மீனவர்கள் கடலுக்கு செல்லவேண்டாம் 

/files/detail1.png

மீனவர்கள் கடலுக்கு செல்லவேண்டாம் 

  • 0
  • 0

-வித்யா 

தமிழகம் மற்றும் புதுச்சேரியின் கடலோர மாவட்டங்களில் பலத்த காற்று வீசும், மேலும் கடலில் அலைகள் சீற்றத்துடன் காணப்படும் என்பதால் மீனவர்கள் கடலுக்கு செல்லவேண்டாம் எனச் சென்னை வானிலை மையம் அறிவுறுத்தியுள்ளது.

"தமிழகத்தில் தென்மேற்குப் பருவ மழை தீவிரமடைந்துள்ளது. இதன் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும். திண்டுக்கல், தேனி, கோவை, நீலகிரி மாவட்டங்களில் கனமழை பெய்யும். திருநெல்வேலியை ஒட்டியுள்ள கிராமங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. இன்று முதல் அடுத்த 24 மணி நேரத்துக்கு குளச்சல் முதல் கீழக்கரை வரையிலான கடற்பகுதிகளில் தென்மேற்குத் திசையில் இருந்து மணிக்கு அறுபது கி.மீ. வேகம் வரை பலத்த காற்றுவீசும். தமிழகத்தின் வடக்குக் கடலோர மாவட்டங்களிலும் புதுச்சேரியிலும் மணிக்கு ஐம்பது கி.மீ வேகம் வரை காற்று வீசும். கடலில் மூன்றரை முதல் 4.3 மீட்டர் உயரம் வரை அலைகள் எழும். இதனால், தமிழகம் மற்றும் புதுச்சேரி மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்குச் செல்ல வேண்டாம்"  எனச் சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மீன்பிடித் தடைக்காலம் முடிந்து, மீனவர்கள் கடலுக்குள் மீன்பிடிக்கச் செல்ல தயாரான நிலையில், வானிலை மையம் இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளது.
\r\n 

\r\n

Leave Comments

Comments (0)