தந்தை பெரியார் பிறந்தநாள் விழா -திருக்குறள் மாநாடு விளக்கப் பொதுக்கூட்டம்

/files/detail1.png

தந்தை பெரியார் பிறந்தநாள் விழா -திருக்குறள் மாநாடு விளக்கப் பொதுக்கூட்டம்

  • 0
  • 0

தந்தை பெரியாரின் பிறந்த நாளை கொண்டாடும் வகையில் எதிர்வரும் 12ஆம் தேதி திருக்குறள் மாநாடு விளக்கப் பொதுக்கூட்டம் சென்னையில் நடைபெறுகிறது.

கடந்த மாதம் 17ஆம் தேதி தந்தை பெரியாரின் 141-வது பிறந்த நாள் பலதரப்பினராலும் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. பல்வேறு தரப்பினர் பெரியாரை சிறப்பிக்கும் வகையில் பொதுக் கூட்டங்களும், கருத்தரங்குகளும் தொடர்ந்து நடைபெற்றுவருகிறது. 

அந்தவகையில் எதிர்வரும் 12ஆம் தேதி மாலை 5 மணி அளவில், அம்பத்தூர் முருகன் கோவில் அருகில், திருக்குறள் மாநாடு விளக்கப் பொதுக்கூட்டம் நடைபெறுகிறது.பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பு சார்பில் நடைபெறும் இந்த கூட்டத்தில் தோழர்கள் கொளத்தூர் மணி,  திருமுருகன் காந்தி, குடந்தை அரசன், பொழிலன் உள்ளிட்ட பலர் கலந்துகொள்கின்றனர்.

Leave Comments

Comments (0)