கொள்ளைகளுக்கு எல்லாம் மூத்த கொள்ளை

/files/detail1.png

கொள்ளைகளுக்கு எல்லாம் மூத்த கொள்ளை

  • 15
  • 0

-இளங்கோவன் ராஜசேகரன்

ஆற்று மணல், கிரானைட் மற்றும் ஒவ்வொரு இடங்களில் படிந்திருக்கும் தாதுக்கள் (placer minerals) ஆகியவற்றை அனைத்து நிலம் சம்பந்தமான விதிகளையும் முற்றிலுமாகப் புறக்கணித்து சட்டவிரோதமாக சுரண்டுவது, அவற்றோடு சுற்றுச்சூழல் மற்றும் கோடிக்கணக்கான மக்களின் வாழ்க்கை மற்றும் வாழ்வாதாரங்களையும் சுரண்டுவது தமிழ்நாட்டை ஒரு பேரழிவாக மாற்ற இருக்கிறது. 

தமிழ்நாடு சுற்றுச்சூழல் விஷயத்தில் எளிதில் தீப்பற்றிவிடக் கூடிய இடம் என்று சொல்லலாம். அனைத்து கொள்ளைகளுக்கும் மூத்த கொள்ளை என்று சொல்லக் கூடிய அளவிற்கு, சுற்றுச்சூழல் மற்றும் மக்களின் வாழ்வாதாரங்களை முற்றிலுமாகப் புறக்கணித்து இயற்கை வளங்களின் சுரண்டல் இரு தசாப்தங்களாக ஓய்வில்லாமல் நடந்துகொண்டிருக்கிறது. 

அரசு வட்டாரத்திலுள்ள பெயர் சொல்ல விரும்பாத நபர்களின் கணக்குப்படி, வருமானம் மற்றும் சிரழிந்து போன இயற்கை வளங்கள் -கடற்கரை தாதுக்கள், ஆற்று மணல், பாக்ஸைட், மெக்னிசைட், கிரானைட் மற்றும் பல- மூலமான இழப்பு ₹1.43 லட்சம் கோடி. அரசாங்கத்திற்கு ஆண்டுதோறும், கடற்கரை மணல் எடுப்பதனால் ₹20,000 கோடி முதல் ₹30,000 கோடி வரையிலும், சட்டவிரோத ஆற்று மணல் கொள்ளையால் ₹30,000 கோடி நஷ்டமும் ஏற்படுவதாக சுற்றுச்சூழலியலாளர்கள் தெரிவிக்கின்றனர்.  கிரானைட் சுரங்க முறைகேடு குறித்து ஆய்வு செய்ய சென்னை உயர் நீதிமன்றம் சட்ட ஆணையராக நியமித்த முன்னாள் மதுரை மாவட்ட ஆட்சியரான U. சகாயம் அவர்கள் மாநில அரசிடம் சமர்ப்பித்த அறிக்கையின் படி, 1995ஆம் ஆண்டில் இருந்து நடந்துவரும் சட்டவிரோதமான கிரானைட் கொள்ளையால் ₹13,000 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. 

தேர்குமுனையிலுள்ள கன்னியாகுமரி முதல் வடக்கில் சென்னை அருகிலுள்ள திருவள்ளூர் வரையிலும், அருகில் இருக்கும் புதுச்சேரியிலும் சுரங்க மாஃபியாக்கள் சிறு சிறு பகுதிகளை ஆள்கிறார்கள்; கடற்கரை மற்றும் ஆற்றுப்படுக்கைகளில் இருந்து டன்கள் கணக்கில் மணலை தோண்டி எடுப்பதோடு,  விளைநிலங்கள் மற்றும் குன்றுகளில் இருந்து கிரானைட் பாறைகளையும் எடுக்கிறார்கள். நாமக்கல் மாவட்டம், கொல்லி மலைகள் மற்றும் சேலம் மாவட்டம் சேர்வராயன் மலைகள் ஆகியவற்றின் பலவீனமான சுற்றுச்சூழலில் பேரழிவை ஏற்படுத்தியுள்ளது பாக்சைட் சுரங்க வேலை. காகிதத்தில் மட்டுமே கட்டுப்படுத்தப்பட்டு, பரவலாக நடந்துவரும் இந்த சுரங்க வேலை, மேற்குத் தொடர்ச்சி மலையின் மழையை நமி இருக்கும், காவேரி மற்றும் தாமிரபரணியைத் தவிர வற்றாத ஆறுகள் இல்லாத தமிழகத்தின் நீராதாரங்கள் மற்றும் சுற்றுச்சூழலை வெகுவாகப் பாதிக்கிறது. 

தென்மேற்கு மற்றும் வடகிழக்கு பருவமழைகள் நீரின் முக்கிய ஆதாரங்களாக இருக்கின்றன, மேலும் அதிகளவிலான நீர் வடகிழக்குப் பருவமழையில் இருந்து கிடைக்கிறது. மாநிலத்தில் சாதாரணமான வருடாந்திர மழைப்பொழிவு சுமார் 945 மி.மீ ஆகும், இதில் 48% வடகிழக்கு பருவமழை மற்றும் 32% தென்மேற்கு பருவமழையில் இருந்து கிடைக்கிறது. அடிக்கடி பருவமழை பொய்த்துவிடுவதால், கடுமையான நீர் பற்றாக்குறை மற்றும் வறட்சி ஏற்படுகிறது.

சொல்லப் போனால், மாநிலத்தின் நீர்வளவியல் ஆய்வில், மேற்பரப்பு நீர் முழுமையும் தீர்ந்துவிட்டதாகவும், நிலத்தடி நீரில் ஏறத்தாழ 85% வைப்பில் இருப்பதாகவும் (tapped) தெரியவந்துள்ளது. வைப்பில் இல்லாத (untapped) நிலத்தடி நீர்வளம் 97 பாதுகாப்பான பகுதிகள் (safe blocks) (70% வைப்பில் உள்ளது), ஏறத்தாழ நெருக்கடி நிலையில் இருப்பதாக 105 பகுதிகள் (semi-critical blocks) (70% முதல் 90% வரை வைப்பில் உள்ளது) மற்றும் 183 நெருக்கடிநிலை பகுதிகளாக (critical blocks) (90% முதல் 100% வரை வைப்பில் உள்ளது) பிரிக்கப்பட்டுள்ளன. ஏறத்தாழ 130 பகுதிகள் அளவிற்கு அதிகமாகச் சுரண்டப்பட்டுள்ளன. 

இந்நிலையில், கடற்கரை மணல், ஆற்று மணல் மற்றும் பிற சிறிய, பெரிய கனிமங்களான கிரானைட் மற்றும் பாக்சைட் ஆகியவற்றை விஞ்ஞானப்பூர்வமற்ற முறையில் சுரங்கம் அமைத்து எடுப்பதால் சுற்றுச்சூழலுக்கு பேரழிவை ஏற்படுத்தும் விளைவுகள் ஏற்படக்கூடும் என்று நீர் நிபுணர்கள் அஞ்சுகின்றனர். உதாரணமாக, தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களின் கடலோர கிராமங்களில், அந்த இடத்தில் படிந்திருக்கும் (placer minerals) கார்னட் போன்ற தாதுக்களுக்காக கடற்கரை மணலை அள்ளியதன் விளைவாக நிலத்தடி நீர் 300 அடி (91 மீட்டர்) வரை வீழ்ச்சியடைந்துள்ளது; இந்த ஆழத்தில் இருக்கும் உவர்ப்பு (salinity) அந்நீரை மனித நுகர்வுக்கு தகுதியற்றதாக்கிவிடுகிறது.

உரிமம் வழக்கொழிந்து போவதற்குக் காரணமான 1991ஆம் ஆண்டில் P.V.நரசிம்ம ராவ் அரசாங்கம் துவக்கி வைத்த நவதாராளமய பொருளாதார சீர்திருத்தங்கள்தான், வளர்ந்துவந்த கட்டுமானத் துறை, தொழில் மற்றும் சேவைத் துறைகளுக்கு உந்துதல் அளிப்பதற்காக இயற்கை வளச் சுரண்டலைத் துரிதப்படுத்தியது.

பணம் புரளும் துறை

தமிழகத்தில் பெரிய அளவில் பணம் புரளும் விஷயமாக ஆற்று மணல் உருவெடுத்தது. பாரம்பரியமான, சுற்றுச்சூழலுக்கு உகந்த செங்கல் மற்றும் களிமண் ஓடுகள் கொண்ட கட்டடங்களிலிருந்து அடுக்குமாடி கான்கிரீட் கட்டமைப்புகளுக்கு மாறியது, சிமெண்ட் மற்றும் மணலுக்கான தேவையை அதிகரித்தது. ஒரு மாதத்திற்கு தமிழகம் 20 லட்சம் டன் சிமெண்டை பயன்படுத்துகிறது. கான்கிரீட் கலவையில் மணல் முக்கியமான பொருளாகும். 

இந்தத் துறையின் அதிகரித்துவரும் மணல் தேவை, மணல் எடுப்பவர்களை ஆற்றுப்படுக்கையில் மேலும் மேலும் ஆழமாகத் தோண்டச் செய்து, மணலுக்கான கறுப்புச் சந்தையை உருவாக்கியது. இதனால் சுற்றுச்சூழல் மட்டுமல்லாமல் கிராமப்புற மக்களும், குறிப்பாக வேளாண்மையை நம்பி வாழ்பவர்கள் பாதிப்படைகிறார்கள். 2003ஆம் ஆண்டில் பொதுப்பணித் துறை (PWD) ஆற்றுமணல் எடுப்பதில் கட்டுப்பாடுகளை விதித்த போதிலும், மணல் எடுப்பது அல்லது மணல் விலையைக் கட்டுப்படுத்தும் எந்தவொரு முயற்சியும் அவமதிப்புக்கு உள்ளாகியுள்ளது. உண்மையை அம்பலப்பத்துபவர்கள் (whistle-blowers) மற்றும் எதிர்ப்புக் குரலை எழுப்பும் பிறரைக் கட்டுப்படுத்தும், மணல் எடுப்பவர்கள், அரசியல்வாதிகள் மற்றும் அதிகாரிகளுக்கு இடையில் இருக்கும் தொடர்பு வலிமையாகிக் கொண்டே வருகிறது. 

4.5 லட்சம் விவசாயிகள் தங்கள் வாழ்வாதாரத்திற்காகச் சார்ந்திருக்கும் காவேரி ஆற்றில், கனரக இயந்திரங்களைப் பயன்படுத்தி பணல் அள்ளும் வேலை இரவும் பகலும் தொடர்கிறது. திருச்சி, கரூர், குளித்தலை, தொட்டியம் மற்றும் முசிரி ஆகிய இடங்களில் விரிந்து கிடக்கும் உலர்ந்துபோன காவேரி படுக்கையில், ஆங்காங்கே மணல் தோண்டி எடுக்கப்பட்ட இடங்கள் காய்ந்த குழிகளாகத் தென்படுகின்றன. வேலூர் மற்றும் மாநிலத்தின் பிற வட மாவட்டங்களில் ஓடும் அதிகமாக மணல் எடுக்கப்பட்ட பாலாறின் நிலை, தோல் பதனிடும் தொழிற்சாலைகளில் இருந்து வெளியாகும் மாசு பொருட்களால் மேலும் மோசமடைந்து இருக்கிறது. 2010இல், ஐந்து ஆண்டுகளுக்கு மணல் எடுக்கக்கூடாது என்று தாமிரபரணியைக் காப்பாற்றியது சென்னை உயர்நீதிமன்றம். 

பிற நதிகளும் ஏறத்தாழ நீர்மூலமாக்கப்பட்டுவிட்டன. விழுப்புரம் மாவட்டம் பெண்ணையாறு, விருத்தாசலம் (கடலூர் மாவட்டம்) வெள்ளாறு, மதுரை மற்றும் தென் மாவட்டங்களிலுள்ள வைகை, கரூர் மாவட்டம் அமராவதி மற்றும் ஈரோடு, கரூர் மாவட்டங்களில் உள்ள பவானி ஆகிய ஆறுகளில் சட்டவிரோத மணல் கொள்ளை பரவலாக நிகழ்கிறது. இந்நதிகளின் துணை நதிகளையோ, ஓடைகளையோ கூட மணல் எடுப்பவர்கள் விட்டுவைக்கவில்லை. ஆற்றுப்படுகை முழுவதும் குழிகளும் மறைகுழிகளும் நிரம்பிக்கிடக்கின்றன. முன்பு தாராளமாகக் கிடைத்த தண்ணீருக்காக, ஆற்றங்கரையில் வசிக்கும் மக்கள் இன்று போராட வேண்டி இருக்கிறது. 

அறிவியல் பூர்வமில்லாமல் மணல் எடுப்பதைத் தடுக்கும் மத்திய அல்லது மாநில அரசுகளின் சட்டங்கள் காகிதத்தில் மட்டுமே உள்ளன. அவற்றைச் செயல்படுத்தும் பொறுப்பைக் கொண்ட நிர்வாகி எதுவும் பேசாத வெறும் ஒரு பார்வையாளராகவே இருக்கிறார். இந்த மாஃபியாக்களைக் கட்டுப்படுத்த முயற்சித்த வெகுசிலரும் அதற்கான கூலியைக் கொடுத்துவிட்டனர். “நட்ப்புறவு கொண்ட அதிகாரிகள்”, என்ற ஊழல் நிறைந்த அரசியல் வர்க்கத்தினர் மற்றும் மணல் கொள்ளையர்களின் கூட்டமைப்பு எந்தவொரு எதிர்ப்புக் குரலையும் ஒடுக்கிவிடுகின்றனர். 

இந்த மோசமான சூழலிலும் உள்ள நல்ல விஷயம் என்றால், அது அங்குள்ள உள்ளூர் சமூகத்தினர் தெரிவிக்கும் எதிர்ப்பாகும். முன்னாள் மதுரை மாவட்ட ஆட்சியர்களான U.சகாயம், அன்ஷுல் மிஸ்ரா; முன்னாள் தூத்துக்குடி ஆட்சியர் ஆஷிஷ்குமார் போன்ற பல மூத்த அதிகாரிகள் அந்தந்த மாவட்டங்களில் நிகழும் சட்டவிரோதமாக மணல் எடுப்பதற்கு எதிராக சட்ட நடவடிக்கைகளைத் தொடங்கினர். அதன் விளைவாக அவர்கள் வெளியேற்றப்பட்டனர். மணல் அள்ளும் மாஃபியாவை எதிர்க்கத் துணிந்த வருவாய்த்துறை, காவல்த்துறையில் உள்ள கீழ்மட்ட அதிகாரிகள் மிரட்டப்பட்டனர், ஆள் வைத்து அடிக்கப்பட்டனர் அல்லது கொலை செய்யப்பட்டனர்.

இந்த நிருபர் அழைத்துச் சென்ற- கடற்கரை, ஆறுகள் மற்றும் மலைகளில் உள்ள- மணல் எடுக்கும் தளங்களின் முழுமையான சுற்றுப்பயணம் ஒரு விஷயத்தை தெளிவுபடுத்தியது: மாநிலத்தில் இப்போது நடந்து கொண்டிருக்கும் அளவிலான மணல் அள்ளும் வேலை கவனிக்கப்படாமல் இதேபோல தொடர அனுமதிக்கப்பட்டால், இயற்கை வளங்கள் மற்றும் சுற்றுச்சூழல் சிதைந்துபோக வழிவகுக்கும். இன்னொரு தசாப்தத்தில் அல்லது சிறிது காலத்தில் மாநிலமே தரிசு நிலமாக மாறிவிடக்கூடும் என்று சொன்னால் அது மிகையாகாது.

கண்மூடித்தனமான இந்த மணல் அள்ளும் வேலை மலைகளை அழித்திருக்கிறது, பல்லுயிர் கோளங்களை அரித்துவிட்டது, காடுகளை இல்லாமல் செய்துவிட்டது, நீர்நிலைகளை அசுத்தமாக்கிவிட்டது மற்றும் மண் வளத்தை சீரழித்துவிட்டது. இது ஆற்றுப்படுகைகளின் பண்புகளை மாற்றி, அப்பகுதியில் வாழும் மக்களின் சமூகப்-பொருளாதார நிலையில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது. கிராமப்புற மக்களின் வாழ்வாதாரத் தேர்வுகள் அதிவேகமாகக் குறைந்து வருகின்றன; இதன் விளைவாக மக்கள் கொத்துக் கொத்தாக நகர்ப்புறங்களுக்கு இடம்பெயர்கின்றனர், இது ஒரு சமூகத்தின் பொருளாதார மற்றும் கலாச்சார சமநிலையை சீர்குலைக்கிறது.

மணல் அள்ளுவதின் விளைவுகள்

2002இல் தமிழ்நாடு நீர்வள பாதுகாப்பு இயக்கம் 'தமிழ்நாட்டில் மணல் அள்ளுவதன் பாதிப்புகள்'  குறித்து மாநில அளவில் நடத்திய பொது விசாரணையில், கோயம்பத்தூர், தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக மண்ணியல் ஆய்வாளரான M. நவீன் சேவியர் மணல் அள்ளுவது ஏற்படுத்தக்கூடிய பாதகமான பதினைந்து விளைவுகளைச் சுட்டிக்காட்டினார்.. தனது கட்டுரையில், நிலத்தடி நீர்மட்டம் குறைவது, விளைச்சல் நிலம் அழிந்து போவது, விவசாயிகளுக்கு வேலையிழப்பு, சட்ட மீறல்கள் மற்றும்  பெரும் உள்கட்டமைப்பு சிதைவு ஆகியவற்றை ஏற்படக்குடிய விளைவுகள் என அவர் குறிப்பிடுகிறார்.

"சுரங்க வேலைப்பாடுகளால் உருவாகும் மாசுபாடு நீரின் நிறத்திலும் மாற்றத்தை ஏற்படுத்துகிறது. கடல் மற்றும் ஆற்று நீரை செம்மஞ்சள் நிறமாக மாற்றுகிறது. குறைவான அமிலக்காரக் குறியீட்டு அளவு (pH), அதிக மின்கடத்தும் தன்மை, கந்தகம் மற்றும் பிற நச்சு உலோக அயனிகளின் மிகுதியான அளவு, கரைந்திருக்கும் ஆக்ஸிஜனின் அளவு குறைதல் மற்றும் அதிகரிக்கும் உயிரிய உயிர்வளித் தேவை (BOD[biochemical oxygen demand]) முதலியவை  நீர் தரத்தின் பாதிப்பை வகைபடுத்தும் சில இயற்பிய-வேதியியல் (physiochemical) மற்றும் உயிரியல் (biological) அளவுருக்கள்" என தன் கட்டுரையில் அவர் சுட்டிக்காட்டுகிறார். இத்தகைய நிலப்பரப்பு சீர்குலைவுகள் தமிழ்நாட்டின் அனைத்து சுரங்க அமைவிடத்திலும் காணமுடியும்.

பலகீனமான ஆட்சியும் கட்டுப்பாடற்ற ஊழலுமே சட்டவிரோதமாக மணல் அள்ளுவதற்கான முக்கிய காரணங்கள் என இவர் முனவைக்கிறார். பல சமயங்களில் சுரங்க வேலைப்பாடின் சமூக பொருளாதார முக்கியதுவம் கவனிக்கபடுவதில்லை. வளங்களை, நிலம், மண் பறிப்பு ஆகியவை முறையாக கையாளப்படாததால் சுற்றுசூழலில் இவை எதிர்மறையான விளைவுகளை எற்படுத்தும் என்கிறது நவீனின் கட்டுரை. மேலும் அது, ஆற்றுபடுகைகளை சுரங்கத்திற்கு குத்தைகைக்கு அளிக்கும் அரசு அதை முன்னெச்சரிக்கையாக கையாள்வதுடன் எல்லைகளை சரியாக நிர்ணயித்துகொள்வதும் தகுந்த நிர்வாகத்தின்கீழ் அதை கண்காணிக்க வேண்டும் என வலியுறுத்துகிறது. ஆனால் வருந்தும்படியாக, இந்த கொள்ளையில் மாநில அரசின் அமைதியும் அதன் அலட்சிய மனப்பான்மையுமே தொடர்கிறது.

அனைத்து வகையான சுரங்க வேலைப்பாடுகளில் உள்ளடங்கியிருக்கும் 36 லட்ச ஹெக்டேர் நிலம் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 4% பங்கு வகிக்கிறது மேலும் 11 லட்சம் மக்களுக்கு வேலை வாய்ப்பளிக்கிறது. "ஆனால் இதனால் ஏற்படும் பொருள் நாசம் என்பது ஈடுசெய்ய முடியாததாகவும் சமூக சீர்குலைவை ஏற்படுத்தக்கூடியதாக  இருக்கும். ஏற்கனவே கண்மூடித்தனமான அகழ்வை எதிர்த்து மக்கள் போராட்ட பதாகைகளை சுமக்க துவங்கிவிட்டார்கள்", என குறிப்பிடுகிறார் இது தொடர்பான பல போராட்டங்களை முன்னின்று நடத்திய சமூக செயற்பாட்டாளரும் சூழலியலாலருமான முகிலன்.

விஞ்ஞானப்பூர்மற்ற மற்றும் கண்மூடித்தனமான அகழ்வால் ஏற்படக்கூடிய தீய விளைவுகளை பற்றி கல்வியியலாளர்கள், ஆய்வாளர்கள், அரசு தரப்பினர், சில தன்னார்வல அமைப்புகள் என பல தரப்பினர் ஆய்வு நடத்தி உள்ளனர். இது தொடர்பாக பல நீதிமன்றங்களும் மாநில அரசிற்கு கண்டனம் பிறபித்துள்ளது. இருந்தும் இந்நிகழ்வு தடையின்றி தொடங்குகிறது. இந்த சுரங்க அமைவிடங்களின் சுற்றுப்புற கிராமங்களில் எந்தவித புகாரும் எழாததற்கு காரணம், முதலாலிகள் இந்த கிராமங்களில் புகுத்தியிருக்கும் பெருமளவு பணம் ஒரு காரணம். இந்த முதலாலிகள் திருவிழா போன்ற நிகழ்வுகளுக்கு தானமாய் பணத்தை தாராளமாக கொடுக்கிறார்கள்.ஊரின் சுக துக்க நிகழ்வுகளில் பங்கெடுக்கிறார்கள்.  இறுக்கமும் பழமைவாத நெறிகளையும் கொண்ட கிராம அமைப்பில்,சாதியத்தால் ஒதுக்கப்பட்ட, வேலைவாய்ப்பு கிட்டாத பலகீனமான மக்கள் இவர்கள் வலையில் கவரப்படுகிறார்கள்.இந்த மக்களை தங்களுக்குள்ளாகவே குழுக்களாக உருவாக ஊக்கப்படுத்தப்பட்டு மற்ற எதிர்ப்பு குரலையும் தடுத்து நிறுத்த தூண்டுகிறார்கள்."சுருக்கமாக சொல்லவேண்டுமானால் மொத்த கிராம நிர்வாகமும் இத்தகைய கூறுகளால் தான் கட்டுப்படுத்த படுகிறது," என்கிறார் ஒரு சமுக செயற்பாட்டாளர்.

இத்தகைய வசீகரங்களின் போதிலும் ஒற்றுமையாக இருக்கும் குடிமக்களை முதலாலிகள் சாதிய வேற்றுமையைத் தூண்டிவிட்டு பிரிக்க பார்க்கிறார்கள்.விருதாச்சளத்தில் வெள்ளாறை மீட்கும் போராட்டத்தை தலைமை எடுத்து நடத்தும் ராஜு தெரிவித்ததாவது.ஆற்றை கொள்ளையடித்த மாஃபியா உள்ளூர் காவல்துறை அதிகாரியின் உறுதுணையுடன் மக்களை பிரிக்க முயற்சித்தாற்கள்.ஆனால் எங்களால் அவர்களின் சதி திட்டத்தை எதிர்கொள்ள முடிந்தது."அவர்களின் அனைத்து தூண்டுதலுக்கு எதிராகவும் எங்களால் ஒற்றுமையாக இருக்க முடிந்தது,"என்கிறார்.விஞ்ஞானிகளின்படி ஆற்றுபடுகையில் மனல் குவிப்பு ஆற்றின் ஆழத்தை குறைப்பதுடன் தொடர் வெள்ளத்தையும் உண்டாக்குகிறது." தமிழ்நாடு சான்றாய் கொண்டு ஆற்றுபடுகையை சமமாக வைத்துக்கொள்ள கண்மூடித்தனமாக சுரண்டலின்றி ஆற்று மனல், முறையாக தூர்வாரப்பட வேண்டும்" என்றார், இது தூத்துகுடியில் 1995 இல் கடற்கரை மணல் அகழ்வு தொடர்பாக விசாரித்ததற்காக  விரட்டியடிக்கப்பட்ட நில அமைப்பியல் வல்லுநர், இந்த நிகழ்விற்கு பிறகு அவர் திருநெல்வேலிக்கு வீடு மாற்றிக்கொண்டார்.

ஒரு மதிப்பீடு படி மனல் அகழ்வு இரண்டு லட்சம் பேருக்கு நேரடி வேலைவாய்ப்பளிக்கிறது.கிட்டத்தட்ட 40 சதவீதம் திருச்சி மற்றும் கரூர் மாவட்ட ஆற்றோர கிராமங்களில் மக்கள் இந்த பணியில் ஈடுபட்டுள்ளனர்,மீதமிருப்பவர்கள் இந்த கொள்ளையில் பங்கெடுக்க முதலாலிகளால் தூண்டபடுகிறார்கள்.இப்படியாக இவர்கள் தங்கள் ஆக்கிரமிக்கும் கிராமங்களில் மொத்த கிராமிய பொருளாதாரத்தையும் கைபற்றிவிடுகிறார்கள்.இந்த சுரங்க மாஃபியாக்களை எதிர்ப்பது என்பது அவ்வளவு எளிதானதல்ல.ஒரு இடத்தில்  தங்களை நிறுவிவிட்டால் பிறகு இவர்களை விலக்குவது சாத்தியமற்றது."உதாரணமாக மாநில அரசு ஒரு புறம்போக்கு நிலத்தின் ஒரு பகுதியை அற்பமான ஒரு தொகைக்கு குத்தகைக்கு விடுகிறது . இந்த மாஃபியாக்கள் கொஞ்சம் கொஞ்சமாக அத்துமீறி சுற்றியிருக்கும் பட்டா நிலங்களை அபகரித்துகொள்வார்கள்" என்கிறார் முகிலன்.இவர்கள் அரசிற்கு ஒரு சிரிய தொகையை அளித்துவிட்டு லட்சங்களில் குவிக்கிறார்கள் .

கிரானைட் ஊழல்

தமிழ்நாட்டின் தெற்குப்பகுதியில் மதுரை மாவட்டம் மேலுர் தாலுக்கில் கீழவலவு கிராமத்தில் கோடிக்கணக்கான மதிப்பில் நடந்துகொண்டிருந்த கிரானைட் ஊழல் மதுரை மாவட்ட ஆட்சியராய் இருந்த சகாயத்தால் அம்பலபடுத்தபட்டது.(அவர் சமர்பித்த அறிக்கையின்படி மதுரயில் இருக்கும் குவாரிகளால் அரசிற்கு 13 ஆயிரம் கோடி நஷ்டம் எற்பட்டுள்ளது).சுற்று நிலங்களில் எல்லாம் சிதறிகிடக்கும் கழிவு கற்கள் விவசாயிகளுக்கும் மற்ற மக்களுக்கும் ஏற்ற வாழ்க்கையை அமைத்துக் கொள்வதற்கு குறைந்த இடங்களையே விட்டுவைகின்றன.இவரை தொடர்ந்து அன்ஷுல் மிஷ்ரா கடுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டு கிரானைட் பிரபுக்களின் மேல் முறைப்படி வழக்கு பதிவு செய்து குவாரிகளுக்கு தடை வாங்கினார்.ஒரு காலத்தில் பசுமை நிறைந்த வைகை-பெரியார் ஆற்றுப் பாசன கிராமங்களில் மிஞ்சுவதெல்லாம் குன்றுகளும்,சிதைந்த நீர் நிலைகளும்,பயனற்ற நீர்குழாய்களும்,இடிந்த சாலைகளும்,பாழடைந்த வீடுகளும் தான்.விவசாயம் முற்றிலும் அழிக்கப்பட்டுவிட்டது.கிரானைட் கொள்ளையை விரிவாக ஆராய் மெட்ராஸ் உயர் நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட சகாயத்திடம் மதுரை மற்றும் அதை சுற்றி வாழும் மக்கள் தங்கள் துக்கங்களை கொட்டித் தீர்த்தார்கள்.அரசாங்கத்திடமிருந்தும் மாஃபியா கும்பலிடமிருந்தும் எதிர்ப்புகள் கிளம்பியவன்னம் இருந்தாலும் சகாயம் தனது ஐந்து மாத விசாரனையை  முடிக்கவுள்ளார்.தகவல்களின் படி   மெட்ராஸ் உயர் நீதிமன்றத்தில் அவர்  சமர்பிக்க போகும் இந்த ஆய்வு அறிக்கை சில புகைபடங்களும் கானொளிகளுடன் சுமார் ஆயிரம் பக்கங்களை கொண்டுள்ளது.

படிந்துகிடக்கும் தாதுக்கள் (Placer deposits)

இதேவேளையில் தூத்துக்குடி கன்னியாகுமரிக்கு இடைபட்ட கடலோரங்களில் பரவலாக எழுந்த, படிம உலோகங்களுக்கான சுரங்க வேலைப்பாடுகளின் சீர்கேடுகளை கண்டித்து விதிக்கப்பட்ட தடையையும் மீறி வேலை தொடர்கிறது.கடல் மனலை சுத்திகரிப்பு செய்யும் பிளாண்டிற்கு கொண்டு செல்லும் லாரி உடன்குடி டெளனில்  ஒரு தொழிலாலியை அடித்து சென்றுவிட்டது.இந்நிகழ்வு  சட்ட நடவடிக்கைகளின் மேல் இவர்கள் கொண்டிருக்கும் அலட்சிய மனப்பான்மையை காட்டுகிறது. கிரானைட் வழக்கை போலவே நீதிமன்றத்தின் தலையீட்டை தவிர்க்கவும் கிளர்ச்சியடைந்திருந்த மீனவர்களை சமாதான படுத்தவும் 2013 இல்  மாநில அரசு வருவாய்த் துறை செயலாளரான கங்காதீப் சிங் பேடி யை கடல்மனல் அகழ்வு தொடர்பான முறைக்கேடுகளை விசாரணை செய்யும்படி நியமித்தது.ஒரு ஆறு மாதங்களுக்கு பிறகு சமர்ப்பித்த இந்த அறிக்கை விரைவில் பொதுவெளியில் வைக்கப்பட உள்ளது.மீதி விசாரணையை ஒத்திவைக்கப்பட்ட நிலையில் மாநில அரசு தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்ட கடலோரங்களில் சுரங்க வேலையை நிறுத்தி வைக்க உத்தரவிட்டுள்ளது.

கடந்த இருபது ஆண்டுகளாக தமிழ்நாட்டின் கனிம வளங்களை சுரங்க முதலாலிகள் சுரண்டிக்கொண்டு இருக்கிறார்கள்.சூழலியலாலர்களும், செயற்பாட்ட ளர்களும் மாநில மற்றும் மத்திய அரசை ஒரு சிறப்பு குழு அமைத்து இத்தகைய நடவடிக்கைகளை கணக்கிடுவதற்காக வலியுறுத்தி வருகிறார்கள். மணல் கடிகாரத்தில் நேரம் ஒடிகொண்டிருக்கிறது.

மொழிபெயர்ப்பு: ஆசிஃபா, ராகேஷ் சுவாமி

நன்றி: thehindu.com

 

Leave Comments

Comments (0)