சென்னையில் இன்று மாலையும் மழை

/files/detail1.png

சென்னையில் இன்று மாலையும் மழை

  • 0
  • 0

-கருப்பு 

வட தமிழகம் மற்றும் தென் தமிழகத்தின் ஒருசில இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய கனமழையோ பெய்ய வாய்ப்புள்ளதாகச் சென்னை வானிலை மைய இயக்குநர் பாலசந்திரன் தெரிவித்துள்ளார்.

தென் மேற்கு பருவமழை தொடங்கியதிலிருந்து தமிழகத்தின் பல பகுதிகளில் நல்ல மழை பெய்துவருகிறது. நேற்று (ஜூலை 02) சென்னையின் பல்வேறு பகுதிகளிலும்சேலம்திருச்சி போன்ற மாவட்டங்களின் பல பகுதிகளிலும் நல்ல மழை பெய்தது. இதனால் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

இந்நிலையில் இன்று (ஜூலை 03) வானிலை மைய இயக்குநர் பாலசந்திரன்சென்னை நுங்கம்பாக்கத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தபோது,  “வெப்ப சலனம் காரணமாகவும்மேற்கு திசை காற்றில் ஏற்பட்ட திசை மற்றும் வேக மாறுபாட்டின் காரணமாகவும் தற்போது மழை பெய்துவருகிறது. அடுத்த 24 மணி நேரத்தில் வட தமிழகம் மற்றும் தென் தமிழகத்தின் ஒருசில இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய கனமழையோ பெய்ய வாய்ப்புள்ளது. சென்னையைப் பொறுத்தவரை மாலை அல்லது இரவு நேரங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுவையில் அநேக இடங்களில் மழை பெய்துள்ளது. ஓரிரு இடங்களில் கனமழை பெய்துள்ளது. அதிகபட்சமாக திருச்சி மாவட்டம் சமயபுரத்தில் 17 செமீ மழையும்காஞ்சிபுரத்தில் 10 செமீ மழையும் பதிவாகியுள்ளது. மேலும் கடந்த ஜூன் 1ஆம் தேதி முதல் ஜூன் 30ஆம் தேதி வரை தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 49 மி.மீ மழை பெய்துள்ளது. இது இயல்பை விட 6 சதவிகிதம் அதிகம் என்று அவர் தெரிவித்தார்.

 

Leave Comments

Comments (0)