சாதியை ஒழிப்போம் கையால் மலம் அள்ளும் இழிவுக்கு உடனே முடிவு கட்டுவோம்- எழுத்தாளர் பாஸ்கர் சக்தி

/files/detail1.png

சாதியை ஒழிப்போம் கையால் மலம் அள்ளும் இழிவுக்கு உடனே முடிவு கட்டுவோம்- எழுத்தாளர் பாஸ்கர் சக்தி

  • 1
  • 0

 

ஒரு குறிப்பிட்ட சாதியினர் மீது இப்படி ஒரு தண்டனையைச் சுமத்துவதற்கு நமக்கு என்ன உரிமை இருக்கிறது. மனிதனை மனிதனாக மதிக்கக்கூடிய யாரும் இந்த விசயத்தை ஏற்க முடியாது என்று எழுத்தாளர் பாஸ்கர் சக்தி தெரிவித்துள்ளார்.

”இந்தியா முழுக்க ஒடுக்கப்பட்ட சமூகத்தை சேர்ந்த மக்கள் மட்டும் மலம் அள்ளும் தொழிலில் ஈடுபடுத்தப்படுகின்றனர். ஏன் அவர்களுக்கு மட்டும் இந்த தண்டனை என்பது மனித சமூகத்திற்கு முன்பு நாம் வைக்கவேண்டிய முக்கியமான கேள்வி. வேறு எந்த சாதி ஆட்களும் அந்த வேலைக்கு போட்டிப்போடுவது இல்லை. பெரிய கார்ப்பரேட் நிறுவனங்களில் கொடுக்கும் அளவிற்கான ஊதியத்தைக் கொடுத்து மலம் அள்ளும் தொழிலுக்கு அழையுங்கள். எந்த சாதியைச் சேர்ந்தவர்கள் வருகிறார்கள் என்று பார்ப்போம். யாரும் வரமாட்டார்கள்.

ஏனென்றால் சுகாதாரமாகவும் கெடுதலான விசயம் அது. தினந்தினம் விச வாயு தாக்கி நிறையப் பேர் இறக்க நேருகிறது. சமீபத்தில் கூட சென்னையில் மூன்று பேர் இறந்தார்கள். எல்லாவற்றிற்கும் மேல் இந்த வேலையை மனிதன் எப்படிச் செய்யமுடியும். மனிதன் செய்ய வேண்டிய வேலையா இது. இந்த தொழில்நுட்ப காலத்தில்  எவ்வளவு விசயங்கள் முன்னேறியிருக்கிறது. அன்றாடம் வீடுகளில் நாம் செய்யக்கூடிய வேலைகளுக்கே கருவிகளைக் கண்டுபிடித்து நம்முடைய வேலை பழுவைக் குறைக்கும்போது, இந்த மாதிரியான இழிவான வேலையை ஒரு சமூகத்தின் மேல், அதுவும் குறிப்பிட்ட சாதியின் மேல் செலுத்துவது நாகரீக சமூகமா என்ற கேள்வி எழுகிறது.

alt text

இது தீர்க்கப்பட கூடாத பிரச்னை இல்லை. இயந்திரத்தைக் கண்டுபிடிப்பது இன்று இருக்கக்கூடிய விஞ்ஞானத்தில் எளிமையான ஒரு விசயம்தான். இங்கு ஒரு சாதி இருக்கிறது, அது அள்ளுகிற வேலையைப் பார்த்துகொள்ளும் என்பது கேவலமான சுயநலம் தானே.

அது தவறில்லையா? இதுபற்றி இப்போதாவது நாம் யோசிக்க வேண்டாமா? தினந்தினம் உயிர்ப் பலிகளைப் படிகிறோம். ஆனால் செய்திகளாகக் கடந்து செல்லும் சுரணையற்றவர்களாகப் போய்விட்டோமா? ஒரு குறிப்பிட்ட சாதியினர் மீது இப்படி ஒரு தண்டனையைச் சுமத்துவதற்கு நமக்கு என்ன உரிமை இருக்கிறது. மனிதனை மனிதனாக மதிக்கக்கூடிய யாரும் இந்த விசயத்தை ஏற்க முடியாது. இது நாகரீக சமூகம் என்று நாம் சொன்னால் இந்த இழிவை ஒழிக்க வேண்டும். சாதியை ஒழிப்போம் கையால் மலம் அள்ளும் இழிவுக்கு உடனே முடிவு கட்டுவோம்” என்று தெரிவித்துள்ளார்.
 

Leave Comments

Comments (0)