பட்டப்படிப்புக்கு நுழைவுத் தேர்வா ?- வலுக்கும் கண்டனங்கள்

/files/detail1.png

பட்டப்படிப்புக்கு நுழைவுத் தேர்வா ?- வலுக்கும் கண்டனங்கள்

  • 0
  • 0

இந்தியா முழுவதும் கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் பட்டப்படிப்புகளுக்கு மாணவர்களைச் சேர்ப்பதற்காக பொதுநுழைவுத்தேர்வு அறிமுகம் செய்யப்படும் என்று மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ரமேஷ் போக்ரியாலின் அறிவிப்புக்கு பலரும் கண்டனம் தெரிவித்துவருகின்றனர்.

புதிய கல்விக் கொள்கை என்ற பெயரில் இந்தியையும் அதன் வழியாகச் சமஸ்கிருதத்தையும் திணிக்கும் புதிய கல்விக் கொள்கையைப் பலரும் எதிர்த்துவருகின்றனர். சேவைத் துறையாக இருந்த கல்வித் துறையை வர்த்தக துறையாக மாற்ற ஆளும் பாசிச பாஜக முடிவெடுத்திருக்கிறது. மையமாக்குதல், சாதியமயமாக்கல், வணிகமயமாக்கல் ஆகிய மூன்று கருத்துக்களை மையப்படுத்தி இந்த புதிய கொள்கை முறை இருப்பதாகவும், அனைத்து மக்களுக்குமான கல்விக் கொள்கையாக இல்லாமல், இது கல்வியைச் சர்வதேசச் சந்தையில் கடைவிரிக்கும் கார்ப்பரேட் நலனாக இருக்கிறது என்றும் இந்த திட்டத்திற்கு எதிர்ப்புகள் வழுபெற்றுவருகிறது. 3, 4, 8ஆம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு, 9 முதல் 12ஆம் வகுப்புகளுக்குப் பருவ தேர்வு (செமஸ்டர்) ஏழை மாணவர்களைக் கல்வி கற்கவிடாமல் தடுக்கும் அத்தனை வழிமுறைகளும் இந்த புதிய கல்விக்கொள்கை முறையில் இருக்கிறது. அதனால் இந்த திட்டத்தை ரத்து செய்யக்கோரித் தொடர் ஆர்ப்பாட்டங்களும், போராட்டங்களும் நடந்தவண்ணம் உள்ளன.

இந்த புதிய கல்விக் கொள்கைக்கு மக்கள் எதிர்ப்பு தெரிவித்துவருகின்ற நிலையில், அந்த புதிய கல்விக் கொள்கை வரைவறிக்கையில் இருக்கிற ஒரு திட்டத்தைத் அறிவித்திருத்துக்கிறது மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை. அதாவது, இந்தியா முழுவதும் கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் பட்டப்படிப்புகளுக்கு மாணவர்களைச் சேர்ப்பதற்காக பொதுநுழைவுத்தேர்வு அறிமுகம் செய்யப்படும் என்று மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ரமேஷ் போக்ரியால் அறிவித்திருக்கிறார். கிராமப்புற ஏழை மாணவர்களின் பட்டப்படிப்புக் கனவுகளைச் சிதைக்கும் நோக்கம் கொண்ட மத்திய அரசின் இந்த நடவடிக்கைக்குப் பலரும் கண்டம் தெரிவித்துவருகின்றனர்.

நுழைவுத்தேர்வு ஏழை கிராமப்புற மாணவர்களின் உயர்கல்வி வாய்ப்பைப் பறிக்கும் செயல். நுழைவுத்தேர்வு கல்வியின் தரத்தை எந்த வகையிலும் உயர்த்தவில்லை என்பதற்கு நீட் தேர்வு தான் உதாரணம். அதனால் மத்திய அரசின் இந்த அறிவிப்பை உடனே திரும்பப் பெற வேண்டும் பலரும் கோரிக்கை விடுத்திருக்கின்றனர். 
 

Leave Comments

Comments (0)