டாஸ்மாக் கடையைப் புதிதாகத் திறக்காதே-  மக்கள் அதிகாரம் போராட்டம்

/files/detail1.png

டாஸ்மாக் கடையைப் புதிதாகத் திறக்காதே-  மக்கள் அதிகாரம் போராட்டம்

  • 0
  • 0

திருச்சி மேற்கு தாலுக்கா ரெட்டை வாய்க்கால் பகுதியில் டாஸ்மாக் கடை திறப்பதைக் கண்டித்து, ஊர் பொதுமக்கள் மற்றும் மக்கள் அதிகாரம் தோழர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருச்சி மேற்கு தாலுக்கா ரெட்டை வாய்க்கால் பகுதியில் புதிதாக டாஸ்மாக் சாராயக் கடை திறக்கப்படுகிறது. இதனைக் கண்டித்து, நேற்று (செப்டம்பர் 30) மாலை 6.30 மணியளவில் ஊர் பொதுமக்கள் மற்றும் மக்கள் அதிகாரம் தோழர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். . இதில் 100-க்கும் மேற்பட்ட தோழர்கள் பங்கேற்றனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் `இங்கு டாஸ்மாக் கடை திறக்கப்படாது` என்று உறுதியளித்தன் பிறகு போராட்டம் கைவிடப்பட்டது.

இந்நிலையில் இன்றும் (அக்டோபர் 01) காவல்துறையின் வாய்வழி உத்தரவாதங்களை நம்ப முடியாது என்பதை அனுபவத்தில் தெரிந்துகொண்ட மக்கள் மீண்டும் போராட்டத்தைத் தொடங்கியுள்ளனர். இங்குப் புதிதாக டாஸ்மாக் திறக்கப்படாது என்பதை எழுத்து பூர்வ உத்தரவாக வட்டாட்சியர் தரவேண்டும் என மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். தற்போது போராட்டம் நடக்கும் பகுதிக்கு வட்டாட்சியர் நேரில் வந்துள்ளதால், அவரிடம் மக்கள் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர்.

Leave Comments

Comments (0)