நாட்டின் வளர்ச்சிக்குத் துணை நிற்கும் மீனவர்களைக் கைவிடாதே- மே 17 இயக்கம்

/files/detail1.png

நாட்டின் வளர்ச்சிக்குத் துணை நிற்கும் மீனவர்களைக் கைவிடாதே- மே 17 இயக்கம்

  • 0
  • 0

ஆழ்கடலில் மீன்பிடிக்கச் சென்ற 150-க்கும் மேற்பட்ட குமரி மீனவர்களை உடனே மீட்டெடுக்கவேண்டும் என்று மே 17 இயக்கத்தோழர்கள் தெரிவித்துள்ளனர்.

அரபிக் கடலில் உருவான கியார் புயலின் காரணமாக, தமிழ்நாடு கன்னியாகுமரி மாவட்டத்திலிருந்து கடலுக்கு மீன் பிடிக்கச் சென்ற நூற்றுக் கணக்கான மீனவர்கள் கரைக்குத் திரும்பாமலிருந்தனர். கடலில் புயலில் சிக்கித் தவித்த மீனவர்களில் சிலர், கோவா, கொச்சின் போன்ற துறைமுகங்களுக்குச் சென்று தப்பித்துள்ளனர். ஆனால் இன்னும் 90க்கும் மேற்பட்ட மீனவர்களைக் காணவில்லை என்று கூறப்படுகிறது. காணாமற்போன மீனவர்களை மீட்கவேண்டும் என்று மீனவர்கள் கோரிக்கை விடுத்துவருகின்றனர்.

இந்நிலையில், மே 17 இயக்கம், “காணாமற்போன எங்கள் மீனவர்கள்? தேடுதலைத் துரிதப்படுத்து, ஆழ்கடலில் மீன்பிடிக்கச் சென்ற 150-க்கும் மேற்பட்ட குமரி மீனவர்களை உடனே மீட்டெடு, பிற மாநிலங்களில் கரை ஒதுங்கிய மீனவர்களை பாதுகாத்திடு, சாட்டிலைட் போன்களை உடனே அனைத்து மீனவர்களுக்கும் வழங்கிடு, நாட்டின் வளர்ச்சிக்குத் துணை நிற்கும் மீனவர்களைக் கைவிடாதே, கடலில் இருக்கும் மீனவர்களுக்கு அரசே பொறுப்பு” என்று அவ்வியக்கத் தோழர்கள் இன்று (அக்டோபர் 31) வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Leave Comments

Comments (0)