அகழ்வாய்வு தற்போது டிரண்டிங் என்பதால் குழந்தைகளுக்கு விடுமுறையில் அதைக் கற்பித்துவிடுவீர்களா? - ஆசிரியர் மகாலட்சுமி

/files/detail1.png

அகழ்வாய்வு தற்போது டிரண்டிங் என்பதால் குழந்தைகளுக்கு விடுமுறையில் அதைக் கற்பித்துவிடுவீர்களா? - ஆசிரியர் மகாலட்சுமி

  • 0
  • 0

நீங்கள் சொல்லும் புராணங்கள் எவையென்று யூகிக்க முடியவில்லை, மதம் சார்ந்ததா? மொழி சார்ந்ததா?  என்று அரசுப் பள்ளி ஆசிரியர்  பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையனுக்குக் கடிதம் எழுதியிருக்கிறார். 

அரசுப் பள்ளி மாணவர்களுக்கு விடுமுறை நாட்களில் ஓய்வு பெற்ற தமிழ் ஆசிரியர்களைக் கொண்டு தொல்லியல், புராணங்கள் கற்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுவருவதாகப் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தபோது கூறினார். மேலும் இது தமிழர் பெருமையை உலகறிய செய்யும் என்றும் அவர் கூறினார்.

இதுகுறித்து அரசுப் பள்ளி ஆசிரியை மகாலட்சுமி, பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையனுக்குக் கடிதம் எழுதியிருக்கிறார். அதில், ”எத்தனை கடிதம்தான் நான் தங்களுக்கு எழுதுவது? உங்கள்மீது மிகுந்த மதிப்பு வைத்திருந்தேன்.
ஒருவரின் மீது வைத்த நம்பிக்கைக் குறைவதற்கு வைத்தவரின் எதிர்பார்ப்புத் தாண்டி, அந்த ஒருவரும் காரணமாயிருக்கிறார். ஏணிப்படி தொடர்ந்து அறிக்கைகளாக விட்டுக்கொண்டிருக்கிறீர்கள்?

பள்ளியில் பயிலும் குழந்தைகள் சாதிய அடையாளக் கயிறு கட்டிவரக்கூடாது என்று யாரோ ஓர் இயக்குநர் அரசாணை போட்டார். ஆனால் நீங்கள் அதுசார்ந்த எதுவுமே தெரியாது என்று கூறிவிட்டீர்கள். அதன்பிறகு வந்த அரசாணைகள் தங்களின் கவனத்திற்குப்பட்டுதான் வருகிறதா எனவும் தெரியவில்லை. ஓர் அறிவிப்புக் கொடுப்பதற்குமுன் அந்த அறிவிப்பு சாத்தியமா? யார் யாரைப் பாதிக்கும்? அம்மா இருந்திருந்தால் இதைச் செய்திருப்பாரா? போன்ற கேள்விகளை எழுப்பிவிட்டுத்தானே விடவேண்டும்?

alt text

அகழ்வாய்வு தற்போது டிரண்டிங் என்பதால் குழந்தைகளுக்கு விடுமுறையில் அதைக் கற்பித்துவிடுவீர்களா? அப்படிக் கற்பித்துவிட்டால் கல்லூரியில் இருக்கும் அதுசார்ந்த படிப்பிற்கு உடனடியாக சேர்க்கை அனுமதிக்கப்பட்டுவிடுமா? நீங்கள் சொல்லும் புராணங்கள் எவையென்று யூகிக்க முடியவில்லை. மதம் சார்ந்ததா? மொழி சார்ந்ததா? அந்தப் புராணத்திலிருந்து ஏற்கனவே செய்யுளெல்லாம் படித்துக்கொண்டுதான் இருக்கிறோம். ஓய்வுபெற்ற தமிழாசிரியர்கள் யாராவது வந்து உங்களிடம் இப்படியொரு விருப்ப மனுவை அளித்தார்களா என்றுகூடக் கேட்கத்தோன்றுகிறது. அப்படி யாராவது கேட்டிருந்தால் அவருக்கு மட்டும் மன உளைச்சல் புராணத்தைத் தந்து அனுப்பிவையுங்கள் பத்திரமாக!” என்று எழுதியுள்ளார்.

Leave Comments

Comments (0)