பாசிச பாஜக ஆட்சி குறித்து இஸ்லாமியப் பெண்களுடன் கலந்துரையாடல்

/files/detail1.png

பாசிச பாஜக ஆட்சி குறித்து இஸ்லாமியப் பெண்களுடன் கலந்துரையாடல்

  • 0
  • 0

 

மனிதி அமைப்பு ஒருங்கிணைக்கும் இஸ்லாமியப் பெண்களுக்கான கலந்துரையாடல் நிகழ்வு எதிர்வரும் அக்டோபர் 12ஆம் தேதி சென்னையில் உள்ள SDPI அலுவலகத்தில் நடைபெறவிருக்கிறது.

பாசிச பாஜக ஆட்சியில் எத்தகைய பண்பாட்டு மாறுதல்களையும் திணிப்புகளையும் சிக்கல்களையும் பாதுகாப்பற்ற நிலையையும் உணருகிறீர்கள்? , இஸ்லாமியப் பெண்ணாக சமூகத்தில் எத்தகைய சவால்களையும் சிக்கல்களையும் சந்திக்கிறீர்கள்?, ஒரு பெண்ணாக ஒட்டுமொத்த சமூகத்தில் எப்படி உணருகிறீர்கள்? எத்தகைய ஆதரவையும் உதவியையும் பிற ஜனநாயக பெண்கள் அமைப்புகளிடமிருந்து எதிர்பார்க்கிறீர்கள்? போன்றவை குறித்து பெண்கள் தங்கள் கருத்துக்களைப் பகிர்ந்துகொள்வதற்கு இந்த கலந்துரையாடல் நிகழ்வு நடைபெறுகிறது. இதில் பல்வேறு இஸ்லாமியப் பெண்கள் அமைப்புகள் கலந்துகொள்ள உள்ளனர். 

இந்நிகழ்வு, எதிர்வரும் சனிக்கிழமை மாலை 3 மணி அளவில் SDPI அலுவலகம், மண்ணடி, பிராட்வே-யில் நடைபெறவுள்ளது.

Leave Comments

Comments (0)