திருவள்ளுவர் சிலையை இழிவுபடுத்திய வன்முறை கும்பலைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்

/files/detail1.png

திருவள்ளுவர் சிலையை இழிவுபடுத்திய வன்முறை கும்பலைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்

  • 0
  • 0

தஞ்சை மாவட்டம், பிள்ளையார் பட்டியில் திருவள்ளுவர் சிலையை இழிவுபடுத்திய வன்முறை கும்பலைக் கண்டித்து நேற்று (நவம்பர் 05) விருத்தாசலத்தில் திருமுதுகுன்றம் திருவள்ளுவர் அறக்கட்டளை சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தஞ்சை மாவட்டம், பிள்ளையார் பட்டியில் திருவள்ளுவர் சிலைக்கு ருத்ராட்ச மாலை அணிவித்து, காவி துண்டு போர்த்தி தீபாராதனை காட்டி உள்ளார் இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜுன் சம்பத். மேலும், உலகப் பொதுமறை திருக்குறளை பகவத்கீதையுடன் ஒப்பிட்ட எச் ராஜா திருக்குறளை வைத்து அரசியல் நடத்தியதைக் கண்டித்தும் நேற்று (நவம்பர் 05)  விருத்தாசலம் பாலகரையில் திருமுதுகுன்றம் திருவள்ளுவர் அறக்கட்டளை சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதன் தலைவர் பெரும் புலவர் சிவராம சேது அவர்கள் ஆர்ப்பாட்டத்துக்குத் தலைமை தாங்கினார். கூட்டத்தில் மக்கள் அதிகாரம் மாநில ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் சி. ராஜு அவர்கள் கண்டன உரையாற்றினார். மேலும், தமிழ் உணர்வாளர்கள் பொது மக்கள் என சுமார் 50-க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டார்கள்.


 

Leave Comments

Comments (0)