அணைகளின் நீர்மட்டம் உயர்வு

/files/detail1.png

அணைகளின் நீர்மட்டம் உயர்வு

  • 0
  • 0

-ஷாஜீ  சாக்கோ  

மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் தொடந்து மழை பெய்துவருவதனால் அணைகளின் நீர்மட்டமும் தொடர்ந்து உயர்ந்து வருகிறது.

இன்னும் இரண்டு மூன்று நாட்களில் கிருஷ்ணசாகர், கபிணி அணைகள் நிரம்பி விடும். இன்றே (ஜூலை 14) மேட்டூர் 77 அடியை எட்டி விட்டதாக தகவல் வருகிறது. காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. அடுத்த பதினைந்து நாட்களும் காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் மழைக்கு வாய்ப்பு இருப்பதால் மேட்டூர் அணை விரைவில் நிரம்பி விடும். என் கணக்குப்படி ஜூலை 27, 28 வாக்கில் மேட்டூர் அணை நிரம்பி விட அதிக வாய்ப்புகள் உள்ளது. இதன் பின் வரும் நீர் வரத்தை மேட்டூரில் இருந்து முழுவதுமாக திறந்து விட்டே ஆக வேண்டிய நிலை வரும். இதனால் காவிரி கரையோரங்களில் வெள்ள அபாயமும் வர இருக்கிறது. இதை கருத்தில் கொண்டு மேட்டூரில் இருந்து அரசு இப்போழுதே நீரை பாசனத்துக்கு திறந்து விடுவதால் காவேரி கரையோரத்தில் வெள்ளம் வராமல் தடுக்கலாம்.
 

Leave Comments

Comments (0)