கோவில் திருவிழாவை பார்த்ததற்காக தலித் இளைஞன் அடித்துக் கொலை

/files/detail1.png

கோவில் திருவிழாவை பார்த்ததற்காக தலித் இளைஞன் அடித்துக் கொலை

  • 0
  • 0

குஜராத் மாநிலம், ஆனந்த் மாவட்டத்தில் உள்ள கோவில் திருவிழாவில் நடைபெற்ற கர்பா நிகழ்வைப் பார்த்ததற்காக 21 வயது தலித் இளைஞன் ஆணவ சாதியினரால் கொல்லப்பட்ட சம்பவம் நடந்துள்ளது.

கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை 4 மணிக்கு ஆனந்த் மாவட்டத்தில் உள்ள ஒரு கோவில் திருவிழா நடைபெற்றது. இந்த கோவிலில் புகழ்பெற்ற கர்பா நிகழ்வு நடைபெறுவது வழக்கம். அவ்வகையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற கோவில் திருவிழாவிலும் கர்பா நிகழ்வு நடைபெற்றது.

alt text

அப்போது தலித் சமூகத்தைச் சேர்ந்த ஜெயேஷ் சோலங்கி, பிரகாஷ் மற்றும் இன்னும் இரண்டு நபர்கள் கோவிலுக்கு அருகே உள்ள வீட்டில் அமர்த்துக்கொண்டு கர்பா நிகழ்வை பார்த்துள்ளனர். இதனைப் பார்த்த பாடேல் சமூகத்தைச் சேர்ந்த சாதி வெறியர்கள் அவர்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்த தாக்குதலில் மற்ற மூன்று பேர் படுகாயமடைந்த நிலையில், ஜெயேஷ் சோலங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

கர்பா நிகழ்வைப் பார்க்க எந்த உரிமையும் தலித்துகளுக்கு இல்லை என்று பாடேல் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் கூறுகின்றனர்.

alt text
“குற்றவாளிகள் மீது எஸ்.சி/எஸ்.டி வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளோம். விரைவில் அவர்களைக் கண்டுபிடித்து கைது செய்வோம்” என்று காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Leave Comments

Comments (0)