ஆணவ சாதி பெண்ணை காதலித்த தலித் இளைஞன் ஆணவக் கொலை

/files/detail1.png

ஆணவ சாதி பெண்ணை காதலித்த தலித் இளைஞன் ஆணவக் கொலை

  • 0
  • 0


உத்தரப்பிரதேச மாநிலத்தில் ஆணவ சாதிப் பெண்ணை காதலித்ததற்காகத் தலித் சமூகத்தைச் சேர்ந்த இளைஞன் ஆணவக் கொலை செய்யப்பட்ட சம்பவம் நடந்திருக்கிறது.

உத்தரப்பிரதேச மாநிலம், ஹார்டோய் மாவட்டம், படீச்சா கிராமத்தைச் சேர்ந்தவர் அபிஷேக் என்கிற மோனு. தலித் சமூகத்தைச் சேர்ந்த இவரும் அதே பகுதியில் வசித்துவரக்கூடிய ஆணவ சாதியை (ஓபிசி) சேர்ந்த பெண் ஒருவரும் காதலித்து வந்துள்ளனர்.

இந்நிலையில் கடந்த செப்டம்பர் மாதம் மோனு அவருடைய காதலியைப் பார்க்கச் சென்றுள்ளார். அப்போது அந்த பெண்ணின் தந்தை மோனுவை சரமாரியாகத் தாக்கி தனது உறவினர்களின் உதவியுடன் மோனுவை தீயிட்டுக் கொளுத்தியுள்ளார்.

மோனுவின் அலறல் சத்தத்தைக் கேட்ட கிராம மக்கள் சிலர் சம்பவ இடத்திற்குச் சென்று அவரை ஹார்டோய் மாவட்ட மருத்துவமனையில் சேர்த்தனர்.  மோனுவை பரிசோதித்த மருத்துவர்கள் லக்னோவில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல அறிவுறுத்தினர். அதன்பேரில் லக்னோவில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும்போதே மோனு உயிரிழந்துவிட்டார்.

மோனு உயிரிழந்துவிட்டார் என்ற செய்தியைக் கேட்டதும் உடல் நிலை சரியில்லாமல் இருந்த அவரது தாய் ராம் பேட்டியும் உயிரிழந்திருக்கிறார்.

இதுதொடர்பாக மோனுவின் உறவினர்கள் அளித்த புகாரின் பேரில், காவல்துறையினர் 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.  அதில் மூவரைக் கைது செய்துள்ளனர்.

Leave Comments

Comments (0)