இறந்தவர்களின் உடல்களைப் புதைக்க இடமில்லாமல் தவித்துவரும் தலித் மக்கள்

/files/detail1.png

இறந்தவர்களின் உடல்களைப் புதைக்க இடமில்லாமல் தவித்துவரும் தலித் மக்கள்

  • 2
  • 0

தூத்துக்குடி மாவட்டத்தில், தலித் சமூகத்தைச் சேர்ந்த மக்களுக்குச் சுடுகாடு வசதி இல்லாததால் அவர்கள்  இறந்தவர்களின் உடல்களைப் புதைக்கத் தவித்துவருகின்றனர்.

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகேயுள்ளது கே.குமராபுரம். இங்கு 600க்கும் மேற்பட்ட தலித் சமூகத்தைச் சேர்ந்த மக்கள் வசித்துவருகின்ற நிலையில், இறந்தால் புதைப்பதற்குச் சுடுகாடு இல்லை. சுடுகாடு அமைத்து தரக்கோரி பலமுறை அதிகாரிகளிடம் மனு அளித்தும் அதிகாரிகள் அந்த மனு மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று அம்மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர். மேலும் இறப்பவர்களின் உடலைக் கிராமத்திற்கு அருகில் இருக்கும் வனத்துறையில் புதைத்துவருகின்றனர். ஆனால் அங்கு உடலைப் புதைப்பதற்கு ரூ.5000, எரிப்பதற்கு ரூ.10,000 வனத்துறை வாங்குவதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

இறந்த  உடல்களைப் புதைக்கத் தவித்துவரும் தலித் மக்களுக்கு அரசு விரைவில் சுடுகாடு அமைத்துதர வேண்டும் என்பதே அனைவரின் கோரிக்கையாக இருக்கிறது. மேலும் இந்த கோரிக்கையை வலியுறுத்தி எதிர்வரும் 17 தேதி நடக்கவிருக்கும் உள்ளாட்சித் தேர்தலை புறக்கணிக்கப்போவதாகக் கூறிவருகின்றனர்.

Leave Comments

Comments (0)