பள்ளியிலிருந்து தனது குழந்தைகள் வெளியேற்றப்பட்டதைக் கண்டித்து தலித் தந்தை போராட்டம்

/files/detail1.png

பள்ளியிலிருந்து தனது குழந்தைகள் வெளியேற்றப்பட்டதைக் கண்டித்து தலித் தந்தை போராட்டம்

  • 0
  • 0

பள்ளியிலிருந்து வெளியேற்றப்பட்ட தனது பிள்ளைகளை மீண்டும் பள்ளியில் சேர்க்கக்கோரி தலித் சமூகத்தைச் சேர்ந்த தந்தை ஒருவர் போராட்டத்தில் ஈடுபட்டுவருகிறார்.

உத்தரப்பிரதேச மாநிலம், சித்தார்த் நகரைச் சேர்ந்தவர் சிவ்குமார். தலித் சமூகத்தைச் சேர்ந்த இவரின் குழந்தைகளான விராஜ் (4), யுவ்ராஜ் (8), ஜோதி (10), சன்சல் (14) ஆகிய நான்கு பேரும் ஷோரத்கர் பகுதியில் உள்ள சரஸ்வதி ஷிஷு வித்யா மந்திர் பள்ளியில் படித்துவருகின்றனர்.

இந்நிலையில் பள்ளி கட்டணம் செலுத்தவில்லை என்பதால் பள்ளி நிர்வாகம் அவர்கள் நான்கு பேரையும் ஆகஸ்ட் 30ஆம் தேதி வெளியேற்றியுள்ளது. இதனைத் தொடர்ந்து சிவ்குமார் பள்ளிக்குச் சென்று பள்ளி முதல்வரை சந்தித்து கட்டணம் செலுத்தச் சிறிது காலம் அவகாசம் வேண்டும் என்றும், கட்டணம் செலுத்த முடியாமல் போனதற்கான காரணங்கள் குறித்தும் விளக்கி, குழந்தைகளைப் பள்ளியில் சேர்த்துக்கொள்ள வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருக்கிறார். ஆனால் பள்ளி முதல்வரோ சிவ்குமாரை சாதியின் பெயரை குறிப்பிட்டு இழிவாகப் பேசி வெளியேற்றியுள்ளார்.

இதனால் கடந்த செப்டம்பர் 26ஆம் தேதி சிவ்குமார், மாவட்ட குற்றவியல் நீதிமன்றத்தில் தனியாக அமர்ந்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டார்.

இதுதொடர்பாக சிவ்குமார் காவல்நிலையத்தில் புகார் அளித்திருக்கிறார். புகாரைப் பெற்றுக்கொண்ட காவல்துறையினர் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனையடுத்து அவர்  மாவட்ட குற்றவியல் நீதிமன்றம் மற்றும் பொது கல்வி அமைச்சர் சதீஷ் திவேதி ஆகியோருக்கு இது தொடர்பாகக் கடிதம் அனுப்பியுள்ளார்.

”என் குழந்தைகளுக்கு நீதி கிடைக்காவிட்டால் சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடுவேன்” என்று சிவ்குமார் கூறியுள்ளார்.

”பள்ளி நிர்வாகம் மீது குற்றம் நிரூபிக்கப்பட்டால், மாவட்ட  குற்றவியல் நீதிமன்றம் இதுகுறித்து தேவையான நடவடிக்கை எடுக்கும்” என்று கல்வி அமைச்சர் சதீஷ் திவேதி தெரிவித்துள்ளார். 
 

Leave Comments

Comments (0)